பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி சென்னை பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இதுவரை 26 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டதற்கான உண்மையான காரணம் என்ன., பின்னணியில் இருப்பவர்கள் யார் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதாகி உள்ள 26 பேரில் நாகேந்திரன் உட்பட 17 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதில் 17 பேர் தங்கள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில், சட்டம் ஒழுங்கு கருத்தில் கொண்டு குண்டா சட்டம் பிறப்பிக்கப்பட்டதாக காவல்துறை தரப்பில் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.
இயந்திரத்தனமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் ரத்து செய்ய வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இந்த நிலையில், நாகேந்திரன் உள்ளிட்ட 17 பேர் மீதான குண்டச் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: அதிகரிக்கும் ஆணவக் கொலைகள்.. உண்மை மட்டும் வெளிய வர்றது இல்ல! நீதிமன்றம் வேதனை..!
குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த 17 பேர் ஜாமீன் கூறி மனு தாக்கல் செய்தாலும் அல்லது வழக்கும் மீதான விசாரணையிலோ எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: சுத்தமா நம்பிக்கை இல்ல! ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு.. ஐகோர்ட் போட்ட தடாலடி உத்தரவு..!