தமிழக அரசியலில் புதிய அலை என்று அழைக்கப்படும் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி தீவிரமாக களமாடி வருகிறார். இளைஞர்கள் பட்டாளம் விஜயின் அரசியலுக்கு பெரும் ஆதரவு கரங்களாக இருக்கின்றனர். ஏதாவது மாற்றம் வராதா என்று எதிர்பார்ப்பவர்களுக்கு விஜய் ஒரு மாற்றமாக அமைவார் என்று கூறப்படுகிறது.
2024 பிப்ரவரியில் விஜய் தொடங்கிய கட்சி தான் தமிழக வெற்றி கழகம். ஊழல், சாதி-மத பிளவுகளை எதிர்த்து, சமூக நீதி, முன்னேற்றம் என்பவற்றை மையமாகக் கொண்டு செயல்படுவதாக அறிவித்தது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாமல், 2026 சட்டமன்றத் தேர்தலில் தனித்து நிற்கும் என அறிவித்தது. இதற்கிடையில், கட்சியின் மாநாடுகள், உறுப்பினர் சேர்க்கை இயக்கங்கள் ஆகியவை மக்களிடையே வரவேற்பைப் பெற்றன.

அடுத்த ஆண்டு நடக்கும் சட்டமன்றத் தேர்தலை மையமாகக் கொண்டு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை உற்சாகத்துடன் தொடங்கி நடத்தி வந்தார். அலைக்கடலென மக்கள் கூட்டம் திரண்டு விஜய்க்கு பேராதரவு கொடுத்தனர். கரூர் சம்பவம் தமிழக வெற்றி கழகத்தை சற்று முடக்கி இருந்தாலும் மீண்டும் விஜய் தனது மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை தொடர்ந்து வருகிறார். புதுச்சேரியில் மக்களை சந்தித்தார். மீண்டும் ஈரோட்டில் பொதுக்கூட்டம் நடத்துகிறார். அதுமட்டுமல்லாது வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணிகளும் நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: திருச்செங்கோட்டில் போட்டியா? தவெக அருண்ராஜ் பரபரப்பு பேட்டி..!
2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை விஜய் நேர்காணல் செய்த தேர்வு செய்ய இருப்பதாகவும் விஜயே வேட்பாளர்களை அறிவிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது. விஜய் மாற்று அரசியலாக இருப்பாரா இல்லையா என்ற வாதம் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள் 2026 இல் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் ஆட்சி அமையும் என்று அக்கட்சியின் கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் தெரிவித்தார். விஜய் தலைமையில் ஆட்சி அமையும் போது உலகின் எட்டாவது அதிசயமாக தமிழக வெற்றி கழகம் அமையும் என்றும் திட்டவட்டமாக கூறினார்.
இதையும் படிங்க: இந்த முறையும் திமுக ஆட்சி தான்... நம்ம சாதனைகளை வீடு வீடாக எடுத்துட்டு போகணும்... முதல்வர் ஸ்டாலின் உரை...!