தமிழக சட்டப்பேரவையில் சமீபத்திய கூட்டத்தொடரின்போது மின்சாரத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் பேசிய ஒரு வார்த்தை, அவைக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகளை சுட்டிக்காட்டும் வகையில் அவர் ‘சிண்டிகேட் கரூர் பேங்க்" என்று குறிப்பிட்டார். இந்தச் சொல்லாடல் திமுக உறுப்பினர்களை உடனடியாக கொந்தளிக்கச் செய்தது.
அவர்கள் சபையில் எழுந்து நின்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சபை முழுவதும் கூச்சலும் ஆரவாரமும் நிரம்பியது. விவாதம் தடைபட்டது.செந்தில் பாலாஜி கரூர் தொகுதியைச் சேர்ந்தவர். அவரது ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துத் துறையிலும் பிற துறைகளிலும் பல முறைகேடுகள் நடந்ததாக எதிர்க்கட்சியினர் நீண்டகாலமாக குற்றம் சாட்டி வந்தனர். வேலை வாய்ப்புகளுக்கு பணம் வாங்கியது, ஒப்பந்தங்களில் முறைகேடு, பணம் புரட்டல் போன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

அந்தச் சூழலில் நிர்மல் குமார் சட்டப்பேரவையில் பேசும்போது, கரூரை மையமாகக் கொண்ட அந்த அமைப்பை ‘கரூர் கம்பெனி’ என்று குறிப்பிட்டு, அதில் செயல்பட்டவர்களின் செயல்பாடுகளை விமர்சித்தார். இது திமுகவினருக்கு நேரடி சவாலாக உணரப்பட்டது. அவர்கள் இதைத் தனிப்பட்ட தாக்குதலாகவும், முன்னாள் அமைச்சரை இழிவுபடுத்தும் முயற்சியாகவும் பார்த்தனர்.திமுக உறுப்பினர்கள் உடனடியாக எழுந்து, அமைச்சர் சொன்னதை திரும்பப் பெற வேண்டும் என்றும், அவதூறான பேச்சு என்றும் குற்றம் சாட்டினர். சிலர் சபையை விட்டு வெளியேற முயன்றனர். சபாநாயகர் தலையிட்டு அமைதியை நிலைநாட்ட முயன்றார். இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் சீண்டிப் பேசியதால் சபை சூடேறியது. நிர்மல் குமார் தனது கருத்தைத் திரும்பப் பெறவில்லை.
இதையும் படிங்க: தனியாக பயணிக்க முடியாது மாற்றத்திறனாளிகள்..! துணையாளருடன் கட்டணமின்றி பயணிக்கும் அறிவிப்பு..!!
அவர் முன்னாள் ஆட்சியின் முறைகேடுகளை வெளிக்கொணர்வதே தனது கடமை என்றும், மக்கள் அறிந்த உண்மைகளைச் சொல்வதில் தவறில்லை என்றும் வலியுறுத்தினார்.இந்தச் சம்பவம் தமிழக அரசியலில் தற்போதைய ஆளும் தவெக அரசுக்கும் திமுகவுக்கும் இடையேயான மோதலை மேலும் தீவிரப்படுத்தியது. சட்டப்பேரவை விவாதங்கள் பெரும்பாலும் கடந்த ஆட்சியின் ஊழல் குற்றச்சாட்டுகளையும் தற்போதைய அரசின் நடவடிக்கைகளையும் சுற்றியே சுழல்கின்றன. நிர்மல் குமார் போன்ற அமைச்சர்கள் முன்னாள் அமைச்சர்களின் செயல்பாடுகளை விமர்சிக்கும்போது, எதிர்க்கட்சியினர் அதைத் தனிப்பட்ட தாக்குதலாகப் பார்க்கின்றனர். அதேநேரம் ஆளும் தரப்பு, மக்கள் முன் உண்மைகளை வெளிப்படுத்தும் உரிமை தங்களுக்கு உண்டு என்கின்றனர்.
இதையும் படிங்க: தேனீ வளர்ப்புக்கு ₹6.84 கோடி..! விலை பொருளுக்கு புவிசார் குறியீடு..! பேரவையில் அதிரடி அறிவிப்பு..!!