தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று எரிசக்தி துறைக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றபோது மின்துறை தொடர்பான முறைகேடுகள் மற்றும் மின் கட்டணப் பிரச்சினைகள் குறித்து காரசாரமான விவாதம் வெடித்தது. அவையில் ஆளும் தவெக மற்றும் எதிர்க்கட்சியான திமுக உறுப்பினர்களிடையே பரபரப்பான பரிமாற்றங்கள் நடைபெற்றன.விவாதத்தின் போது திமுக சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் மின்சாரத் துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி பேசுகையில், கடந்த இரண்டு மாதங்களாக மின் கணக்கீட்டு முறையில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டினார்.
தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு பல வீடுகளில் மின் கட்டணம் திடீரென அதிகரித்துள்ளதாகவும், அமைச்சர் ஒரு விளக்கத்தை அளிக்கிறார், மின்வாரிய அதிகாரிகள் வேறொரு விளக்கத்தை அளிக்கின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அமைச்சரும் அதிகாரிகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும், மின்சாரத் துறையில் காலிப் பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும் என்றும், மின் விநியோகத்தைக் கண்காணிக்கும் இயக்குநர் பதவி காலியாக உள்ளது என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், முந்தைய திமுக ஆட்சியில் 423 துணை மின் நிலையங்கள் அறிவிக்கப்பட்டு 122 நிலையங்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டதாகவும், மின் உற்பத்தி அதிகரிப்பு மற்றும் புதிய மின் வழித்தடங்களுக்கான அடிப்படைக் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டதாகவும் அவர் புள்ளிவிவரங்களுடன் எடுத்துரைத்தார்.இதற்குப் பதிலளித்த எரிசக்தித் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், மின் கட்டணம் திடீரென அதிகரித்ததாக எழுந்துள்ள புகார்களுக்கு விளக்கம் அளித்தார்.
இதையும் படிங்க: ஜோசியம் பார்த்து மஞ்சள் துண்டு போட்டதெல்லாம் தமிழ்நாடு பார்த்திடுச்சு..! உதயநிதிக்கு அமைச்சர் நிர்மல் பதிலடி.!
மின் கணக்கீட்டில் எந்தவித குளறுபடியும் இல்லை என்றும், கட்டண உயர்வு குற்றச்சாட்டுகள் தவறானவை என்றும் அவர் மறுத்தார். தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு சில சரிசெய்தல்கள் மற்றும் முந்தைய காலகட்டத்தில் பின்பற்றப்பட்ட முறைகள் காரணமாக சில நுகர்வோருக்கு கட்டணம் அதிகமாகத் தோன்றியதாக அவர் விளக்கினார். மின்வாரியத்தின் நிதி நிலை மற்றும் உள்கட்டமைப்பு சவால்கள் குறித்தும் அவர் பேசினார்.
இதையும் படிங்க: கொத்து கொத்தாக செத்து மிதக்கும் மீன்கள்..! பேரவையில் அமைச்சர் ராஜீவ் விளக்கம்..!