தமிழக சட்டப்பேரவையில் அண்மையில் எழுந்த விவாதங்களில் ஒன்று, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு சார்பில் கார்கள் வழங்குவது தொடர்பானது. முதலமைச்சர் விஜய் அறிவித்த இந்தத் திட்டம் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் விமர்சனங்களை எதிர்கொண்டது. சிலர் மாநிலத்தின் நிதிநிலைமையைச் சுட்டிக்காட்டி இதை எதிர்த்தனர்.
இந்நிலையில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் சட்டப்பேரவையில் பேசும்போது இந்த விஷயத்தை எடுத்துரைத்தார்.அமைச்சர் ஷாஜகான் தனது உரையில் கடந்த கால நிகழ்வுகளை நினைவுபடுத்தினார். பல ஆண்டுகளுக்கு முன்பு கலைஞர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் 300க்கும் அதிகமான யூனியன் சேர்மேன்களுக்கு கார்கள் வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். அந்த நேரத்திலும் மாநிலத்தின் நிதிநிலைமை சரியில்லாமல் இருந்தது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

அப்போது அந்த முடிவுக்கு எதிராக யாரும் கேள்வி எழுப்பவில்லை என்றும், இப்போது எம்.எல்.ஏக்களுக்கு கார்கள் வழங்குவதை மட்டும் கேள்விக்குள்ளாக்குவது சரியல்ல என்றும் அமைச்சர் கேள்வி எழுப்பினார்.இந்தக் கருத்து சட்டப்பேரவைக்குள்ளும் வெளியிலும் கவனத்தை ஈர்த்தது. தற்போதைய அரசின் அறிவிப்பு புதியதல்ல என்பதை வரலாற்று உதாரணத்துடன் விளக்க முயன்றார் அமைச்சர்.
இதையும் படிங்க: மின்துறை முறைகேடு.! செந்தில் பாலாஜி vs நிர்மல் குமார்..!! பேரவையில் பரபரப்பு விவாதம்.!
கலைஞர் ஆட்சியில் ஊராட்சி ஒன்றியத் தலைவர்களுக்கு வாகன வசதி செய்து கொடுக்கப்பட்டது போலவே, இப்போதும் சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிப் பணிகளை எளிதாக்கும் வகையில் இந்த வசதி அளிக்கப்படுகிறது என்பதே அவரது வாதமாக இருந்தது.இந்தப் பேச்சு எம்.எல்.ஏக்களுக்கு கார் வழங்குவது தொடர்பான விவாதத்தை மேலும் தீவிரமாக்கியது. சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மாநிலக் கடனைச் சுட்டிக்காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். அதே சமயம் ஆளும் கட்சி உறுப்பினர்களும் சில கூட்டணிக் கட்சியினரும் இதை ஆதரித்தனர்.
இதையும் படிங்க: ஜோசியம் பார்த்து மஞ்சள் துண்டு போட்டதெல்லாம் தமிழ்நாடு பார்த்திடுச்சு..! உதயநிதிக்கு அமைச்சர் நிர்மல் பதிலடி.!