தமிழ்நாட்டில் அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், இசை, தையல், கணினி அறிவியல், தோட்டக்கலை மற்றும் வாழ்வியல் திறன் போன்ற பாடங்களை கற்பிக்க, 2012-ஆம் ஆண்டு அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தின் கீழ் 16,500-க்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் குறைந்த ஊதியத்தில் பணியமர்த்தப்பட்டனர். மேலும் இவர்களின் பணி தற்காலிகமானது என்று அரசு அறிவித்திருந்தது. இவர்கள் கடந்த 13 ஆண்டுகளாக தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வருவதுடன், பணி நிரந்தரம், ஊதிய உயர்வு மற்றும் சமூகப் பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ந்து போராடி வருகின்றனர்.
சென்னையில் பகுதி நேர ஆசிரியர்கள் நடத்தி வரும் இந்த போராட்டத்தில் புதுக்கோட்டையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஆசிரியர் தம்பதி சென்னையில் 11 நாட்களாக போராடி வருகின்றனர். பணி நிரந்தரம் கோரி போராடிய பகுதி நேர ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். மாற்றுத்திறனாளி தம்பதி என்பவர்களும் ராயப்பேட்டை சமுதாயம் நலக்கூடத்தில் கைது செய்யப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், கர்ப்பிணி ஆசிரியைக்கு சக ஆசிரியர்களும் காவலர்களும் சீர்வரிசை வாங்கித் தந்து வளையல் அணிவித்து வளைகாப்பு நடத்தியுள்ளனர். அங்கிருந்த அனைவரும் ஆசிரியைக்கு வளையல்கள் அணிவித்து, நலங்கு வைத்து வாழ்த்தினர். இந்த சம்பவம் காண்போரை நெகிழச் செய்தது. வளைகாப்பு என்பது தமிழ் பண்பாட்டில் கர்ப்பிணி பெண்ணுக்கு நடத்தப்படும் ஒரு முக்கியமான சடங்கு. இது பொதுவாக கர்ப்பத்தின் ஏழாவது அல்லது ஒன்பதாவது மாதத்தில் நடைபெறுகிறது.
இதையும் படிங்க: 2340 ஆசிரியர்களுக்கு நிரந்தர பணி.. சீக்கிரமே நல்ல சேதி வரும்! அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு..!
வளைகாப்பு சடங்கு கர்ப்பிணி பெண்ணுக்கு உணர்ச்சி ரீதியாகவும், மன ரீதியாகவும் ஆதரவு அளிக்கிறது. இது அவளுக்கு புதிய பொறுப்புகளை ஏற்க உற்சாகமூட்டுகிறது. இந்த சடங்கு குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களை ஒன்றிணைத்து, கர்ப்பிணிக்கு அவர்களின் அன்பையும் ஆசிர்வாதத்தையும் வெளிப்படுத்த வைக்கிறது. இது சமூக ஒற்றுமையை வலுப்படுத்துகிறது. இந்த நிலையில், 11 நாட்களாக போராட்ட களத்தில் இருக்கும் கர்ப்பிணி மாற்றுத்திறனாளி ஆசிரியருக்கு சக ஆசிரியர்கள் இணைந்து வளைகாப்பு நடத்தி வாழ்த்தியது ஆச்சரியமடைய செய்துள்ளது.
இதையும் படிங்க: கொந்தளிப்பில் பகுதி நேர ஆசிரியர்கள்.. 8வது நாளாக தொடரும் போராட்டம்..!