அதிமுக பேரணிக்குள் திடீரென தேனீக்கள் புகுந்ததால் அதிர்ச்சியடைந்த கே.ஏ.செங்கோட்டையனை பாதுகாப்பாக அருகில் இருந்த கடைக்குள் நிர்வாகிகள் அழைத்து சென்றனர். தேனீக்கள் கூட்டம் அடங்கிய பின் மீண்டும் அதே இடத்தில் தொடங்கிய பேரணி.

அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பில், மே தின பேரணி ஈரோடு வஉசி பூங்கா மைதானத்தில் இருந்து தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக அண்ணா தொழிற்சங்கத்தினர் திரண்டிருந்தனர்.

ட்ரம்ஸ் இசைக்க தொண்டர்கள் சிலர் ஆடிக்கொண்டிருந்த நிலையில், பலத்த காற்று வீசியதால் அருகில் மரத்தில் இருந்த தேனீக்கள் கூட்டத்திற்குள் பறந்து வந்தன. ஆடிக்கொண்டிருந்தவர்களை தேனீக்கள் பதம் பார்த்ததால், ஆட்டத்தை பாதியில் விட்டு ஓட்டம் பிடித்தனர்.

இதையும் படிங்க: போலீசுக்கு போனா 3 சாவு விழும்.. ரூ.1 கோடி கேட்டு மாஜி அமைச்சருக்கு கொலை மிரட்டல்!
அதே நேரத்தில் பேரணியை தொடங்கி வைக்க முன்னாள் அமைச்சர் கே எ செங்கோட்டையன் வருகை தந்தார். அப்போது அவரை பாதுகாப்பாக நிர்வாகிகள் அருகில் இருந்த கடைக்குள் அழைத்துச் சென்றனர் அதனைத் தொடர்ந்து சற்று நேரத்தில் தேனீக்கள் கூட்டம் அடங்கியதும் அதற்குப் பின் அதே இடத்தில் முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் கே.சி கருப்பணன் ஆகியோர் டெம்போ வாகனத்தில் நின்றபடி நலத்திட்ட உதவிகளை வழங்கினர் ..
இதையும் படிங்க: அண்ணாமலை தலையில் இடியை இறக்கிய நயினார் நாகேந்திரன்... கையறு நிலையில் கதறும் அண்ணனின் விழுதுகள்...!