தென்காசி அருகே உள்ளது சீவநல்லூர் என்ற கிராமம். இங்கு இங்குள்ள கோவில் ஒன்றில் நேற்று அன்னதானம் வழங்கப்பட்டது இதற்காக கிராமத்தில் ஏராளமானோர் சென்று கோவிலில் வழிபட்டு அன்னதானத்தை அருந்திவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர்.
இவர்கள் கூட்டமாக வந்து கொண்டிருந்தபோது அந்தப் பகுதியில் தென்னை மரத்தில் கூடு கட்டி இருந்த கடந்தை வண்டுகள் இவர்களை தாக்கியது. இதில் ஐந்து பேர் கடுமையாக பாதிக்கப்பட்டதால் நேற்றிரவு சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் இன்று காலை லட்சுமண பிள்ளை (88) அவரது மனைவி மகராசி (76) ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் .
வண்டு கடித்து தாக்குதலுக்குள்ளான ஆறுமுகம் (75 )சாந்தி ( 65) சண்முக பாரதி (29) ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதொடர்பாக இலத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த தென்னை மரத்தில் இருந்த கடந்தை குளவிக் கூட்டை தீயணைப்புத்துறையினர் அப்புறப்படுத்தினர்.

இதையும் படிங்க: என்னை பேசவே விடல...இது என்ன பாரபட்சம்! ராகுல் காந்தி கடும் குற்றச்சாட்டு
கடந்த மாத இறுதியில் தென்காசி மாவட்டத்தில் 50 வயதுடைய ஒரு நபரைஇதுபோன்று கடந்தை வண்டு கடித்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அதற்கு அடுத்து திருநெல்வேலியில் கடந்தை வண்டு கடித்ததில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. தற்போது தென்காசி அருகே கடந்தை வண்டு கடித்து வயதான தம்பதி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கதண்டு அல்லது கடந்தை வண்டுகள் என்று சொல்லப்படுகிற வண்டுகள் மிகவும் கொடூரமான விஷத்தன்மை கொண்டவை. பெரிய மரங்களில் கூடுகட்டி வாழும் இவை பொதுவாக குளவிகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த வண்டு கடித்தால் கடுமையான வலி மற்றும் வீக்கம் ஏற்படும். அதுவே ஒன்றுக்கு மேற்பட்ட வண்டுகள் கடித்தால் அதுவே உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும். குறிப்பாக, இந்த வண்டுகள் தலைப்பகுதியில் கடித்தால் உடனடியாக மூளையை தாக்குவதோடு, சிறுநீரகத்தையும் செயலிழக்க வைக்கும் தன்மை கொண்டவை.
இதையும் படிங்க: தாக்குதல் நடத்துனீங்க சரி! அந்த தீவிரவாதிகள் எங்க? மாநிலங்களவையில் கார்கே சரமாரி கேள்வி..!