தமிழக அரசின் உத்தரவுப்படி தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள வைகை அணையிலிருந்து மூன்றாம் பூர்வீக பாசனப்பகுதியின் கீழ் ராமநாதபுரம் சிவகங்கை மாவட்டங்களில் அமைந்துள்ள விவசாய நிலங்களின் பாசனத்திற்காக வினாடிக்கு 2000 கன அடி வீதம் தற்போது தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
அணையில் உள்ள சிறிய 7 மதகுகள் மற்றும் நீர்மின் நிலையம் வழியாக ஆற்றில் திறக்கப்படும் இந்த தண்ணீர் ஐந்து மாவட்டங்களுக்கு ஆற்றின் வழியாக செல்வதால் தேனி, மதுரை, திண்டுக்கல் , சிவகங்கை ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் 6 நாட்களுக்கு மொத்தம் 1354 மில்லியன் கன அடி அளவிற்கு திறக்கப்படும் இந்த தண்ணீரின் மூலம் இராமநாதபுரம் மாவட்டத்தில் 200 கண்மாய்களும், சிவகங்கை மாவட்டத்தில் 41 கண்மாய்களும் முழுமையாக நிரம்பி 67, 741 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உதட்டளவில் சமூக நீதி... ஊரை ஏமாற்றும் திமுக... என்ன முதல்வரே இதெல்லாம்? பூந்து விளாசிய அண்ணாமலை...!
வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் ஐந்து மாவட்ட வைகை ஆற்றங்கரையோர மக்கள் ஆபத்தை உணராமல் வைகை ஆற்றை கடப்பதற்கோ, வைகை ஆற்றில் குளிப்பதற்கோ முயற்சிக்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 63.08 அடியாகவும், அணையில் இருந்து ராமநாதபுரம் சிவகங்கை மாவட்டம் பாசனத்திற்காக 1500 கன அடி தண்ணீரும் பெரியார் பிரதான கால்வாய் வழியாக 1900 கன அடி தண்ணீரும், மதுரை தேனி மாவட்ட குடிநீர் தேவைக்காக 69 கன அடி என மொத்தமாக 3469 கன அடி தண்ணீர் வைகை அணையில் இருந்து திறந்து விடப்படுவதால் வைகை அணையின் பூங்கா பகுதியை இணைக்கும் தரைப் பாலத்தை மூழ்கடித்தபடி தண்ணீர் செல்கிறது. மேலும் அணையின் நீர்இருப்பு 4,227 மில்லியன் கனஅடியாகவும், அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1162 கனஅடியாக உள்ளது.
இதையும் படிங்க: சோனியா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்! ராஜ்யசபாவில் கொதிக்கும் நட்டா! அனல் பறக்கும் வாதம்!