சென்னை: தமிழக மக்களுக்கு ரயில்வே துறையின் சிறப்பு பரிசாக, இன்று (ஜனவரி 17, 2026) முதல் மேற்கு வங்காளம் - தமிழ்நாடு இடையே 3 புதிய அம்ரித் பாரத் ரெயில் சேவைகள் தொடங்கப்படுகின்றன. வந்தே பாரத் ரெயில்களுக்கு இணையான வசதிகளுடன், ஆனால் ஏசி இல்லாத பெட்டிகளுடன் அனைத்து தரப்பு மக்களும் எளிதாக பயணிக்கும் வகையில் இந்த ரெயில்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, இன்று மேற்கு வங்காளத்தின் ரங்கபாணி ரயில் நிலையத்தில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியில் இந்த மூன்று ரெயில் சேவைகளும் தொடங்கி வைக்கப்படுகின்றன.
- நாகர்கோவில் – ஜல்பாய்குரி அம்ரித் பாரத் (20604)
இன்று மதியம் 1.45 மணிக்கு ரங்கபாணியில் இருந்து புறப்பட்டு, ஜனவரி 19 இரவு 7.15 மணிக்கு நாகர்கோவில் வந்தடையும்.
தமிழகத்தில் நிற்கும் முக்கிய நிலையங்கள்: காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை. - ஜல்பாய்குரி – திருச்சி அம்ரித் பாரத் (20610)
இன்று மதியம் 1.45 மணிக்கு ஜல்பாய்குரியில் இருந்து புறப்பட்டு, ஜனவரி 19 மதியம் 2.15 மணிக்கு திருச்சி வந்தடையும்.
தமிழகத்தில் நிற்கும் நிலையங்கள்: எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர். - தாம்பரம் – சந்திரகாச்சி அம்ரித் பாரத் (16107)
நாளை (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 2.45 மணிக்கு சந்திரகாச்சியில் இருந்து புறப்பட்டு, ஜனவரி 19 மாலை 6.45 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

இந்த மூன்று ரெயில்களும் வாராந்திர சேவையாக இயக்கப்படும். முழு நேர அட்டவணை, டிக்கெட் விலை, முன்பதிவு விவரங்கள் போன்றவை தனித்தனியாக விரைவில் வெளியிடப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: அண்ணாமலையார் கோவிலில் அலைமோதிய கூட்டம்... குறுக்கு வழியால் கைகலப்பு..!
தமிழகத்தின் பல முக்கிய நகரங்களை வடகிழக்கு இந்தியாவுடன் நேரடியாக இணைக்கும் இந்த ரெயில்கள், வணிகம், சுற்றுலா, கல்வி, திருமணம் உள்ளிட்ட பல்வேறு பயணங்களுக்கு மிகுந்த வசதியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுமக்கள் இனி ஜல்பாய்குரி, சிலிகுரி, தார்ஜிலிங், கலிம்போங் போன்ற பிரபல இடங்களுக்கு எளிதாகவும், வசதியாகவும் சென்று வரலாம்!
இதையும் படிங்க: புது டெல்லி செல்கிறேன்!! எனக்காக அல்ல!! காங்கிரஸ் எம்.பி பதிவு!! கூட்டணிக்கு சூசகம்!!