தமிழ் சினிமாவின் சமூக அக்கறை கொண்ட இயக்குநர்களில் மாரி செல்வராஜ் தனித்துவமான இடத்தைப் பெற்றவர். அவரது படங்கள் என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல, சமூகத்தின் ஆழமான காயங்களைத் தொடும், அழுத்தமான கதைகள். 2025 அக்டோபர் 17ஆம் தேதி திரைக்கு வந்த பைசன், அவரது இந்தப் பயணத்தின் முதல் முழு நீளப் படம். இது வெறும் விளையாட்டுப் படமாகத் தொடங்கி, சாதி, சமூக அநீதி, தனிப்பட்ட போராட்டம் என உண்மைகளைப் பேசும் ஒரு சக்திவாய்ந்த கதை.
தூத்துக்குடியைச் சேர்ந்த அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரர் மணத்தி கணேசனின் உண்மை வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவான இந்தப் படம், துருவ் விக்ரமின் தீவிரமான நடிப்பால் உயிர் பெறுகிறது. படத்தின் தலைப்பே பைசன் காளமாடன். ஒரு சமூகத்தின் சக்தியையும், அதன் கடினமான போராட்டங்களையும் சுருக்கமாகச் சொல்லுகிறது.

படத்தின் கதை தென்னிந்தியாவின் ஒரு சிறிய கிராமத்தில் தொடங்குகிறது. இங்கே சாதி, பகைமை, சமூக அடக்குமுறை என அனைத்தும் ஒரு சுவராக நிற்கின்றன. நாயகன் காளமாடன் ஒரு கிராமத்து இளைஞன். அவனது வாழ்க்கை கபடி என்ற விளையாட்டைச் சுற்றி சுழல்கிறது. கபடி அவருக்கு வெறும் விளையாட்டு அல்ல. அது அவனது அடையாளம், போராட்டம் போன்றவற்றை வெளிப்படுத்துகின்றன. இந்த படத்திற்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளன. இந்த நிலையில் பைசன் படம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை அப்படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜுடன் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.
இதையும் படிங்க: "தாழ்த்தப்பட்டவர் என்பதால் புறக்கணிப்பு" - செல்வப் பெருந்தகைக்கு ஆதரவாக களமிறங்கிய நயினார் நாகேந்திரன்...!
அப்போது பேசிய முத்தரசன், தேசிய விருது கிடைக்கிறதோ கிடைக்கவில்லையோ அதை பற்றி தனக்கு கவலை இல்லை என்றும் பைசன் படத்தை மக்கள் அங்கீகரிப்பார்கள் என்றும் தெரிவித்தார். சடுகுடு போட்டியை மையமாக வைத்து எத்தனை தடைகள் இந்த சமூகத்தில் இருக்கிறது என்பதை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார் என்று கூறினார் . ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து ஒருவர் வளர்வது என்பது இன்றைக்கும் பெரிய சவாலான விஷயம் எனவும் கூறினார். சமூகத்தின் இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ற படம் பைசன் என கூறினார்.
இதையும் படிங்க: என்கிட்ட சொல்லாம ஏரியை திறப்பீங்களா? அதிகாரிகளை வாட்டிய செல்வப் பெருந்தகை...!