கிருஷ்ணா ஆற்றிலிருந்து நீர் தாண்டி வருவதன் மூலம் சென்னையின் நீர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய இது உதவுகிறது செம்பரம்பாக்கம் ஏரி, சென்னையிலிருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இது 24 அடி ஆழம் கொண்டது. மொத்த நீர் சேமிப்பு திறன் சுமார் 103 TMC. ஏரியின் நீளம் சுமார் 11 கி.மீ. மற்றும் அகலம் 4 கி.மீ. என்பதால், இது காஞ்சிபுரம் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்று. அடையார் ஆற்றுடன் இணைந்துள்ள இது, மழைநீர் மற்றும் கிருஷ்ணா நீரை சேமிக்கிறது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ள நிலையில் தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. கனமழை எதிரொலியாக செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் கிடு கிடுவென உயர்ந்தது. 24 அடி கொள்ளளவு கொண்ட ஏரியில் நீர்மட்டம் 21 அடியை எட்டியது. இதன் காரணமாக நேற்று மாலை 4 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

எனவே சிறுகளத்தூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், வழுதலம்பேடு ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. நீர்வரத்து மேலும் அதிகரித்த நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு 500 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இந்த நிலையில் செம்பரம்பாக்கம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை ஆய்வு செய்தார். நீர்வரத்து தொடர்பாக அதிகாரிகளிடம் ஆலோசித்தார்.
இதையும் படிங்க: சென்னை மக்களே உஷார்... செம்பரம்பாக்கத்தில் நீர் திறப்பு அதிகரிப்பு... வேக, வேகமாக நெருங்கி வரும் வெள்ளம்...!
அப்போது தன்னிடம் கூறாமல் தண்ணீர் திறந்ததாக செல்வப் பெருந்தகை அதிகாரிகளை கடிந்து பேசினார். மக்கள் பிரதிநிதிகளிடம் கூறாமல் ஏரியை திறப்பீர்களா என காட்டமாக பேசி இருந்தார். அதிகாரிகளே மக்கள் பிரதிநிதிகளாக மாறுவீர்களா என்றும் அப்போது எதற்கு அரசும் அரசின் பிரதிநிதிகளும் என்றும் கேள்வி எழுப்பினார். இதனால் சலசலப்பு ஏற்பட்டது. நீர் வரத்தை பொறுத்து நீர் திறக்கும் முடிவு செய்த அதிகாரிகளிடம் செல்வப் பெருந்தகை அடாவடி காட்டியதாக குற்றம் சாட்டப்படுகிறது.
இதையும் படிங்க: சென்னை மக்களே உஷார்.... கிடுகிடுவென உயரும் செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம்... தற்போதைய நிலவரம் இதோ...!