2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான பாஜகவின் ஆயத்தப் பணிகள் பல்வேறு மூலோபாய மற்றும் அமைப்பு ரீதியான முயற்சிகளை உள்ளடக்கியவையாக உள்ளன. இந்தத் தேர்தல் தமிழ்நாட்டில் பாஜகவின் செல்வாக்கை விரிவாக்குவதற்கு முக்கியமான ஒரு வாய்ப்பாகக் கருதப்படுகிறது.
2023-ல் அதிமுகவுடனான கூட்டணி முறிந்த பின்னர், 2025 ஏப்ரல் 11-ஆம் தேதி சென்னையில் நடந்த கூட்டு பத்திரிகையாளர் சந்திப்பில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக மீண்டும் கூட்டணி அமைப்பதாக அறிவித்தனர்.
தமிழகத்தில் காலூன்ற நினைக்கும் பாஜக அதிமுகவோடு கூட்டணி வைத்திருப்பதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. தமிழகத்தில் பாஜக தரப்பில் பல்வேறு தேர்தல் பணிகள் நடைபெற்று வருகிறது. பல்வேறு ஆலோசனைக் கூட்டங்கள் நிர்வாகிகள் நியமனம் உள்ளிட்டவை நடைபெறுகின்றன. அந்த வகையில் தமிழக பாஜக துணை தலைவர்கள் 14 பேரின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக பாஜக மாநில துணைத்தலைவர்களாக 14 பேரை நியமனம் செய்து மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழக பாஜக துணை தலைவராக நடிகை குஷ்பு நியமனம் செய்யப்பட்டுள்ளார். முன்னாள் எம்எல்ஏ விஜயதாரணிக்கு பாஜகவில் எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை.
மாநிலத் துணைத் தலைவர்களாக சக்கரவர்த்தி, துரைசாமி, ராமலிங்கம், கரு. நாகராஜன், சசிகலா புஷ்பா, கனகசபாபதி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் டால்பின் ஸ்ரீதர், சம்பத், பால் கனகராஜ், ஜெயப்பிரகாஷ், வெங்கடேசன் உள்ளிட்ட நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாநிலப் பிரிவு அமைப்பாளராக கே.டி ராகவன், நாச்சியப்பன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பாஜக மாநில பொதுச் செயலாளராக பாலகணபதி, ஸ்ரீனிவாசன், முருகானந்த, கார்த்தியாயினி, ஏ.பி முருகானந்தம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: கழட்டி விட்ட பாஜக... அடுத்த ஆட்டத்திற்கு தயாரான ஓபிஎஸ் - நாளை முக்கிய முடிவு?
மேலும் பாஜக மாநில பொருளாளராக சேகர், இணைப்பொருளாளராக சிவசுப்பிரமணியம் ஆகியோரை நயினார் நாகேந்திரன் அறிவித்து பட்டியலை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கோட்டை விட்ட அரசு! குற்றவாளிகளுக்கு குளிர் விட்டு போச்சு! பாலியல் சம்பவங்களை கண்டித்த நயினார்..!