தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகிறது. குற்றவாளிகளை கைது செய்து தண்டனை கொடுத்தாலும் அவ்வப்போது பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் இரண்டு அரசு பள்ளி மாணவிகளுக்கும் ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கும் மேலும் ஒரு கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனம்பள்ளி பகுதியில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இரு அரசுப்பள்ளி மாணவிகள், மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி, கல்லூரி மாணவி என நான்கு பேருக்கு பாலியல் வன்கொடுமை நடந்துள்ளதாக கூறப்படும் சம்பவங்கள் அதிர்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார்.
இதையும் படிங்க: அமைதியா போக மன்மோகன் சிங் அரசு இல்ல.. இது மோடி சர்க்கார்! லோக்சபாவில் அமித் ஷா செய்த வெறித்தனம்..!
வயது வித்தியாசமின்றி மனநலம் குன்றிய சிறுமியைக் கூட பாலியல் ரீதியாக வேட்டையாடுமளவிற்கு தமிழகத்தில் குற்றவாளிகளுக்கு குளிர்விட்டுப் போய்விட்டது என்பதைத் தான் இந்த சம்பவங்கள் நமக்கு உணர்த்துவதாக தெரிவித்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவள்ளூரில் பள்ளிச் சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் கொடுமை செய்த குற்றவாளியின் சிசிடிவி அடையாளங்கள் தெரிந்தும் அவனைக் கைது செய்ய வாரக்கணக்கில் எடுத்துக் கொண்ட திமுகவின் காவல்துறையை கண்டால் குற்றவாளிகள் பயப்படுவார்களா என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார்.

திமுக ஆட்சியில் சீர்குலைந்து கிடக்கும் சட்டம் ஒழுங்கினால் பெண்கள் வெளியில் நடமாடுவதற்கே அஞ்சுகிறார்கள் என்பதை நாமும் பலமுறை எடுத்துக் கூறி வருவதாகவும் பல போராட்டங்களை முன்னெடுத்து கொண்டிருப்பதாகவும் கூறினார்.
ஆனால், போராட்டக்காரர்களை எப்படி அடக்கி ஒடுக்கி பொய் வழக்கு போடலாம் என்பதிலும் மற்ற மாநிலங்களில் நடக்கும் நிகழ்வுகளைப் பற்றி பேசி திசைத்திருப்புவதிலும் அக்கறையுடன் செயலாற்றும் திமுக அரசு, பெண்களுக்கெதிரான குற்றங்களைக் கட்டுப்படுத்துவதில் கோட்டை விட்டுவிடுவதாகவும் குற்றம் சாட்டினார்.
இனி இந்த உதவாத அரசையோ அல்லது கட்டப்பஞ்சாயத்து காவல்துறையையோ நம்பி பயனில்லை என்று கூறிய நயினார் நாகேந்திரன், நமது வீட்டுப் பிள்ளைகளின் பாதுகாப்பிற்கு நாம் தான் பொறுப்பு என்றும் வரும் சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றம் வரும், தமிழகப் பெண்களின் கண்ணியம் காக்கப்படும் எனவும் உறுதிப்பட கறினார்.
இதையும் படிங்க: உங்க கட்சிக்காரங்க கல்லா கட்ட மக்களை காவு வாங்குவீங்களா? பூந்து விளாசிய அண்ணாமலை!