சென்னையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடந்த நேரலை விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக இளைஞரணி தலைவர் எஸ்.ஜி. சூர்யா மற்றும் அவரது தொண்டர்கள் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்துள்ளது. இந்த சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக இளைஞரணி தலைவர் எஸ்.ஜி. சூர்யா வெளியிட்ட அறிக்கையில் இந்த சம்பவத்தை வன்மையாக கண்டித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: திமுகவினர் கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்ள தைரியம் இல்லாதவர்கள். அதனால் அவர்கள் வன்முறையை கையில் எடுத்துள்ளனர்.
என் மீதும், என்னை பாதுகாக்க வந்த 20க்கும் மேற்பட்ட இளைஞரணி உறுப்பினர்கள் மீதும் திமுகவின் கூலிப்படை கொலைவெறியுடன் தாக்குதல் நடத்தியுள்ளது. இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
இதையும் படிங்க: திருப்பரங்குன்றம் தீபம்! மதக்கலவரத்தை துாண்டுகிறது திமுக! அண்ணாமலை ஆவேசம்!
இந்த சம்பவம் சென்னை எழும்பூரில் உள்ள ஒரு தனியார் தொலைக்காட்சி அலுவலகத்தில் நடந்தது. விவாதம் முடிந்த பிறகு, நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ் செல்வன் மற்றும் காவல்துறை அதிகாரிகள் முன்னிலையிலேயே இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.
When reason prevails, DMK’s only response is violence.
As BJYM State President Thiru @SuryahSG avl firmly cornered the DMK with facts during a debate hosted by @News18TamilNadu, hundreds of DMK goons armed with deadly weapons and soda bottles stormed the venue to attack him and… pic.twitter.com/EXyf8KDcEs
— K.Annamalai (@annamalai_k) January 9, 2026
குண்டர்கள் போலீசாரிடம், "நாங்கள் 10 நிமிடங்கள் மின்சார இணைப்பை துண்டிக்கிறோம். நீங்கள் சென்று விடுங்கள். நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்" என்று கூறியுள்ளனர். சொன்னபடியே 10 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, திட்டமிட்டபடி இந்த வன்முறை நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு காவல்துறையின் உடந்தை இருந்ததாக எஸ்.ஜி. சூர்யா குற்றம்சாட்டியுள்ளார். இது சட்டம் ஒழுங்கு சீர்குலைவின் உச்சக்கட்டம் என்று அவர் கூறியுள்ளார். மேலும், இது கருத்து சுதந்திரத்திற்கு எதிரான போர் என்றும், திமுகவின் இந்த போக்கு ஜனநாயகத்திற்கு ஆபத்தானது என்றும் அவர் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட இளைஞரணி உறுப்பினர்களின் சிந்திய ரத்தத்திற்கு விடியா அரசு பதில் சொல்ல வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. பாஜக தரப்பு இதை வன்மையாக கண்டித்துள்ளது. திமுக தரப்பில் இருந்து இதுவரை எந்த பதிலும் வெளியாகவில்லை. காவல்துறை இந்த புகார் குறித்து விசாரணை நடத்தி வருகிறது. இது போன்ற சம்பவங்கள் அரசியல் விவாதங்களில் வன்முறையை தூண்டும் என்பதால், பொதுமக்கள் மத்தியில் கவலை எழுந்துள்ளது.
இதையும் படிங்க: இதான் ஸ்டாலினின் கடைசி அஸ்திரம்! இனி மக்கள் தெளிவா முடிவெடுப்பாங்க! அண்ணாமலை சூட்சமம்!