2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக மற்றும் பாஜக கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு இரு கட்சிகளும் இணைந்துள்ளன. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திமுகவின் அவல நிலைகளை எடுத்துக் கூறுவதற்காகவும் அதிமுக சாதனைகளை எடுத்துரைப்பதற்காகவும் தேர்தலுக்கு ஒரு வருடத்திற்கு முன்பாகவே சுற்றுப்பயணத்தை தொடங்கிவிட்டார். பூத் கமிட்டி கூட்டங்கள், ஆலோசனைக் கூட்டங்கள், பொதுக்குழு கூட்டங்கள் என கட்சியை பலப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது.
திமுகவும் ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் வீடு வீடாகச் சென்று திமுகவின் சாதனைகளை எடுத்துக் கூறி உறுப்பினர் சேர்க்கையை நடத்தி வருகின்றனர். அது மட்டும் அல்ல அது தனித்தனியாக நிர்வாகிகளை சந்தித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். இதேபோல் பாஜகவையும் பலப்படுத்துவதற்காக பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த நிலையில் பூத் களை வலிமைப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள இருக்கும் பாஜக நிர்வாகிகளுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளார்.

அறப்பணியை அர்ப்பணிப்போடு மேற்கொண்டுள்ள அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். மேலும் தமிழகத்தின் முன்னேற்றத்தை தடுக்கும் களைச் செடியான திமுக ஆட்சியை அகற்றுவதோடு பட்டித் தொட்டி எங்கும் பாஜகவர்களை பலப்படுத்த அயராது உழைக்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் 2026 சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சியை தமிழகத்தில் அமைய செய்யும் அடித்தளம் இடம் அரும் பணியை மேற்கொண்டுள்ளார்கள் என்றும் கூறினார். மனப்பூர்வமாக தங்களை ஈடுபடுத்திக் கொண்டு தமிழகத்தில் தாமரையை மலரச் செய்வதற்கு வேண்டிய பணிகளை உளமாற செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும், பாகுபாடின்றி அனைவரும் ஒற்றுமையோடு செயல்பட வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: சொர்ணபுரியில் இருப்பது போல உணர்வு.. முருக பக்தர்கள் மாநாட்டில் நெகிழ்ந்து பேசிய நயினார்..!
இதையும் படிங்க: மைக் வைச்சுட்டு சும்மா 4 ரீல்ஸ் போட்டா தலைவனா நீ ?அண்ணாமலை அட்டாக்...