திருப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகில் பெஹல்காம் பயங்கரவாத தாக்குதலை கண்டித்து பாஜகவினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பாகிஸ்தான் அதிபர்ஆசிப் அலி சர்தாரியின் புகைப்படத்தை செருப்பால் அடித்தும் ,புகைப்படத்தை கிழித்து எறிந்தும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக குடியேறிய பாகிஸ்தான், வங்கதேசத்தை சேர்ந்தவர்களை வெளியேற்ற வேண்டும், ராணுவம் மீது ஆதாரமற்ற வதந்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும், காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை கண்டித்தும் தமிழகம் முழுவதும் பாஜகவினர் இன்று பல்வேறு பகுதிகளிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் புதிய பேருந்து நிலையம் முன்புறம்திருப்பூர் வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் காஷ்மீர் மாநிலம் பகல் காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் சீனிவாசன் தலைமையில் பகல் காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை கண்டித்து கோஷங்கள் எழுப்பி 500-க்கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: டெல்லியில் உச்சகட்ட பதற்றம்..! பாகிஸ்தான் தூதரகத்தை முற்றுகையிட்ட பாஜக..!
இந்த ஆர்ப்பாட்டத்தில் பாகிஸ்தான் அதிபர்ஆசிப் அலி சர்தாரியின் புகைப்படத்தை செருப்பால் அடித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் புகைப்படத்தை கிழித்தவர்களிடமிருந்து பிடிங்கி தடுத்ததால் அங்கு சிறிய வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையும் படிங்க: அடக்கொடுமையே... தாய்மொழியிலேயே இவ்வளவு தப்பா... பாஜக போராட்டத்தில் அதகளம்...!