பாரதிய ஜனதா கட்சியிடம் கூட்டணி வைத்ததால் தான் பல கட்சிகள் தோற்றுவிட்டது என்று ஆதவ் அர்ஜுனா தெரிவித்த கருத்துக்கு தவெக பிள்ளை பிடிக்கிற மாதிரி எம்எல்ஏக்களை புடிச்சிட்டு இருக்காங்க நாங்கள் அப்படி இல்ல என்று ஆதவ் அர்ஜுனாவுக்கு தமிழிசை சௌந்தர்ராஜன் பதிலடி.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக முன்னாள் ஆளுநரும் முன்னாள் பாரதி ஜனதா கட்சியின் மாநில தலைவருமான தமிழிசை சௌந்தர்ராஜன் மற்றும் பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: லீவா இருந்தாலும் அமைச்சர் ராஜ்மோகன் இத செஞ்சுட்டாரு..! விசிக எம்.பி ரவிக்குமார் பாராட்டு..!!
கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தர்ராஜன் :- தவெக ஆட்சி அமைத்து 15 நாட்களில் 15 க்கும் மேற்பட்ட பிரச்சினைகள் நடந்துள்ளது இந்த அரசு நிர்வாகத்தின் திறமையற்றதை காண்பிக்கிறது 15 நாள் என்பது குறுகிய காலம் கிடையாது ஒரு நிர்வாகத்தை சீர்படுத்த முடியும் ஆனால் மின்சார தடையாக இருக்கட்டும் பெண்கள் பாதுகாப்பாக இருக்கட்டும் லஞ்ச ஒழிப்பாக இருக்கட்டும் டாஸ்மாக்கில் பாட்டலுக்கு 10 ரூபாய் வாங்குறாங்களா இல்லை இருபது ரூபாய் வாங்குறாங்களா இல்லை வாங்கலையா நிர்வாகத்தில் என்ன மாதிரி இருக்காங்க ஒரு தொழில்துறை அமைச்சர் ரீல்ஸ் போடுறாங்க ரீல்ஸ் மூலமாக முதலீடு கேட்கிறார்கள் என்ன நடக்குது என்பது தெரியவில்லை.
ஆதாவ் அர்ஜுனா சொல்கிறார் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்ததால் தான் பல கட்சிகள் தோற்றுவிட்டது என்று பாரதிய ஜனதா கட்சி 21 மாநிலங்களில் நாங்கள் ஆள்கிறோம் தவெக பிள்ளை பிடிக்கிற மாதிரி புடிச்சிட்டு இருக்கீங்க நாங்கள் அப்படி இல்லை நாங்கள் மக்களுக்கு பிடித்த மாதிரி இருக்கிறோம்.
இரண்டே பாராளுமன்றத்தை வைத்திருந்த நாங்கள் தற்போது பாராளுமன்றத்தை ஆள்கிறோம். தமிழ்நாட்டிலும் நாங்கள் பலம் பெறுவோம் என்று தெரிவித்தார்.
ராஜினாமா செய்த எம்எல்ஏக்கள் தொகுதி மக்களுக்காக செய்தல் என்று சொல்கிறார்கள் ஆனால் தொகுதி மக்களுக்கு இதை விட எதுவும் அநீதி செய்திட முடியாது. 20 நாளுக்கு முன்பு தேர்ந்தெடுக்கப்பட்டு உடனே பதவியை ராஜினாமா செய்வது ஜனநாயகத்துக்கு எதிரானது தவெக செய்வது மிக மிக தவறு என்று நான் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.
பிரதமரை முதலமைச்சர் விஜய் பத்து நிமிடங்கள் தான் சந்தித்தார் என்று நிருபர்கள் கேட்ட கேள்விக்கு அதற்கு நான் பதிலளிக்க முடியாது விஜய் தான் பதிலளிக்க வேண்டும் என்று தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்தார். மேகதாது அணை விவகாரத்தில் தமிழக மக்களின் நலனை பாஜக நலன் என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அடுத்த TARGET..! தொழிற்சங்கத்தை பலப்படுத்தும் தவெக..! எகிறும் எதிர்ப்பார்ப்பு..!!