அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் சேலத்தில் உள்ள வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஆர்.டி.எக்ஸ். குண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி வீட்டில் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் தீவிர சோதனைகளில் ஈடுபட்டுள்ளனர்.

வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார் என்பது குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.