நெல்லையில் மூளை சாவடைந்த 17 வயது சிறுவனின் உடல் உறுப்புகள் தானமாக கொடுக்கப்பட்டன. விபத்தில் சிக்கி உயிரிழந்த சிறுவனின் உடல் உறுப்புகள் தானமாக கொடுக்க பெற்றோர் ஒப்புக்கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. சிறுவன் உடலுக்கு அரசமரியாதை செலுத்தப்பட்டது. உறுப்பு தானம் செய்வதன் மூலம் ஒரே ஒரு நபர் எட்டு உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்பது மிகப் பெரிய சிறப்பு.
இதயம், நுரையீரல், கல்லீரல், கணையம், இரண்டு சிறுநீரகங்கள், சிறு குடல் போன்ற முக்கிய உறுப்புகளை ஒரு மூளைச்சாவு அடைந்த நன்கொடையாளரிடமிருந்து பெற்று, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் நோயாளிகளுக்கு மாற்றி வைக்க முடியும். இதயம் பெறுபவர் மீண்டும் இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பலாம்; சிறுநீரகம் பெறுபவர் டயாலிசிஸ் இயந்திரத்தை நம்பியிருந்த நிலையிலிருந்து விடுதலை பெறலாம். கல்லீரல் தானம் பெறுபவர் மரண வாயிலிருந்து திரும்பலாம்.

இவ்வாறு ஒரு உறுப்பு தானம் பல குடும்பங்களுக்கு நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் தருகிறது. நெல்லையைச் சேர்ந்த 17 வயது சிறுவன் பாலு என்பவர் சாலை விபத்தில் சிக்கினார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில் மூளைச் சாவு அடைந்துள்ளார். அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் சம்மதித்துள்ளனர். இதை அடுத்து மூளை சாவடைந்த பாலுவின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.
இதையும் படிங்க: ஆணவக் கொலை அல்ல..! இளம்பெண் உயிரிழப்பு விவகாரத்தில் திடீர் திருப்பம்..!
பாலுவின் நுரையீரல், கல்லீரல், கருவிழிகள், சிறுநீரகம் ஆகியவை தானமாக வழங்கப்பட்டது. இதை எடுத்து சிறுவன் பாலுவின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்டோர் பாலுவின் உடலுக்கு சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினர். மூளைச் சாவு உள்ளிட்டவற்றால் உயிர் போகும் நிலையிலும் பிறரை வாழவைத்து செல்கின்றனர்.
இதையும் படிங்க: மீண்டும் ஆணவப் படுகொலை? இளம்பெண் மர்ம மரணம்... பெற்றோர் மீது காதலன் குற்றச்சாட்டு...!