• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, October 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நாளை தாராபுரம்-மதுராந்தகம் இடைத்தேர்தல்..!! 3 கட்சிகளின் அரசியல் சோதனை..!! நடக்கப்போவது என்ன..?? ஓர் அலசல்..!!

    ஆனால் தவெக வேட்பாளர் மீதான அதிருப்தி மற்றும் அதிமுக சுணக்கம் ஆகியவை சாதகமாக மாறியதாகக் கணக்கிடுகிறது. 
    Author By Shanthi M. Mon, 05 Oct 2026 16:40:11 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    bypoll-eps-stalin-on-ground-vijay-at-the-spot-lose

    தமிழ்நாட்டு அரசியல் களம் இப்போது தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலைச் சுற்றியே சுழல்கிறது. அக்டோபர் 6 அன்று நடைபெறும் இந்த வாக்குப்பதிவு, வெறும் இரண்டு தொகுதிகளுக்கான போட்டி அல்ல. கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்குப் பிறகு திமுக, அதிமுக, தவெக ஆகிய மூன்று பலமான கட்சிகள் நேரடியாக மோதும் முதல் பெரிய அரசியல் சோதனையாக இது மாறியுள்ளது. கம்யூனிஸ்டுகள் மற்றும் நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட ஐந்து முனைப் போட்டி இருந்தாலும், மூன்று முக்கிய கட்சிகளுக்கிடையேயான மோதலே அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.

    இந்த இரண்டு தொகுதிகளும் காலியானதற்குக் காரணம், 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் (மதுராந்தகம்) மற்றும் சத்தியபாமா (தாராபுரம்) ஆகியோர் பதவி விலகி தவெகவில் இணைந்ததுதான். இருவருமே இப்போது தவெக சார்பில் மீண்டும் போட்டியிடுகின்றனர். இதனால் இந்தத் தேர்தல் ஒவ்வொரு கட்சிக்கும் தனித்தனி அரசியல் கணக்குகளை உருவாக்கியுள்ளது.

    அதிமுகவுக்கு இது பழைய கோட்டையைத் தக்கவைக்கும் போராட்டம். கடந்த சட்டமன்றத் தேர்தலில் இரு தொகுதிகளிலும் அதிமுக அபார வெற்றி பெற்றது. தாராபுரம் அதன் பாரம்பரிய பலப்பகுதிகளில் ஒன்று. ஆனால் உள்ளூர் நிர்வாகிகளின் சுணக்கம் மற்றும் சிலர் தவெக பக்கம் சாய்ந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. எடப்பாடி பழனிசாமி வெளியிலிருந்து கட்சியினரை அனுப்பி களப்பணியைத் தீவிரப்படுத்தினார். மதுராந்தகத்திலும் கே.பி. முனுசாமி தலைமையில் பணிகள் நடைபெற்றன. 

    இதையும் படிங்க: சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலின்: தவெக அமைச்சர் அருண்ராஜ் கடும் கண்டனம்!

    இரண்டிலும் தோல்வி ஏற்பட்டால், பொதுத்தேர்தலில் வென்ற தொகுதிகளையும் தக்கவைக்க முடியவில்லையா என்ற கேள்வி எழும். கட்சிக்குள் தலைமைக்கு எதிரான குரல்கள் வலுப்படலாம். சிவி சண்முகம், வேலுமணி போன்றோர் தவெக பக்கம் செல்லும் வாய்ப்பு பற்றிய பேச்சுகளும் உலா வருகின்றன. எனவே இது வெறும் தொகுதி வெற்றி அல்ல; எடப்பாடி தலைமையின் கீழ் கட்சி ஒற்றுமையுடன் நிற்கிறதா என்பதை நிரூபிக்கும் தேர்தலாக மாறியுள்ளது.

    byelection

    தவெகவுக்கு இது ஆட்சிக்கு வந்த பிறகு முதல் பெரிய சோதனை. ஆளுங்கட்சியாக இருப்பதால், ஒரு தொகுதியிலாவது தோல்வி ஏற்பட்டாலும் எதிர்க்கட்சிகள் அதை மக்கள் மனநிலையாக சித்தரிக்க வாய்ப்புள்ளது. வேட்பாளர்கள் மீதான அதிருப்தி மற்றும் குதிரைப் பேரம் குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும், முதலமைச்சர் விஜய் நான்கு நாட்கள் நேரடியாகப் பிரச்சாரம் செய்தார். தாராபுரத்தில் ரோடு ஷோவும் நடத்தினார். சத்தியபாமாவின் உணர்ச்சிப் பேச்சு உள்ளிட்டவை கட்சியின் கலக்கத்தை வெளிப்படுத்துவதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். 

    ஒரு தொகுதியிலாவது வெற்றி பெற்றால் தவெக வெல்லக்கூடிய கட்சி என்ற நம்பிக்கை வலுப்படும். இரண்டிலும் வெற்றி அடைந்தால், விஜய் மையமான புதிய அரசியல் கணக்கு வேகமாக முன்னேறும். எனவே ஒட்டுமொத்த கட்சி இயந்திரத்தையும் களமிறக்கியுள்ளது. திமுகவுக்கு இது தனித்து நிற்கும் வாய்ப்பு. இரு தொகுதிகளிலும் ஆரம்பத்தில் நம்பிக்கை குறைவாக இருந்தது. மதுராந்தகத்தில் கடந்த இரண்டு தேர்தல்களிலும் வெற்றி கிட்டவில்லை. ஆனால் தவெக வேட்பாளர் மீதான அதிருப்தி மற்றும் அதிமுக சுணக்கம் ஆகியவை சாதகமாக மாறியதாகக் கணக்கிடுகிறது. 

    மு.க. ஸ்டாலின் நேரடியாகக் களப்பணியை முடுக்கிவிட்டார். ஒரு தொகுதியிலாவது வென்றால், எதிர்க்கட்சியாகத் தனது பலத்தை நிரூபித்து, புதிய அரசியல் சக்தியின் வேகத்தை அளவிட முடியும். கூட்டணி பலத்தை நம்பாமல் தனியாகப் போட்டியிடுவதால், கிடைக்கும் வாக்குகள் கட்சியின் கட்டமைப்புக்கு புதிய அளவுகோலாக அமையும். மூன்று கட்சிகளுக்கும் மூன்று விதமான கட்டாயங்கள் உள்ளன. 

    அதிமுகவுக்கு பழைய வாக்கு வங்கியைக் காப்பாற்றும் தேர்தல்; தவெகவுக்கு புதிய ஆட்சி மற்றும் விஜய்யின் செல்வாக்கின் முதல் சோதனை; திமுகவுக்கு எதிர்க்கட்சி பலத்தை நிரூபிக்கும் வாய்ப்பு. எனவே தாராபுரம், மதுராந்தகத்தில் விழும் ஒவ்வொரு வாக்கும் அடுத்த கட்ட தமிழக அரசியலில் கட்சிகளின் நிலையைத் தீர்மானிக்கும் முக்கியமான அரசியல் அளவுகோலாக மாறப்போகிறது. வாக்குப்பதிவு நாளை நடைபெறும். முடிவுகள் அக்டோபர் 9 அன்று தெரியும். தமிழகம் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறது.
     

    இதையும் படிங்க: தவெக அதிகளவில் பணம் கொடுப்பதாக மார்க்சிஸ்ட் கட்சியே கூறியுள்ளது: தமிழிசை சௌந்தரராஜன் குற்றச்சாட்டு!

    மேலும் படிங்க
    மழை வரப்போகுது.. குடை கொண்டு போங்க மக்களே..! 27 மாவட்டங்களுக்கு அலர்ட்..!!

    மழை வரப்போகுது.. குடை கொண்டு போங்க மக்களே..! 27 மாவட்டங்களுக்கு அலர்ட்..!!

    தமிழ்நாடு
    "படிவம் 6ஐ ஞானேஷ்குமார் மாற்றியது அம்பலம்"..! உச்ச நீதிமன்றத்தை சுட்டிக்காட்டிய ராகுல் காந்தி..!!

    "படிவம் 6ஐ ஞானேஷ்குமார் மாற்றியது அம்பலம்"..! உச்ச நீதிமன்றத்தை சுட்டிக்காட்டிய ராகுல் காந்தி..!!

    தமிழ்நாடு
    கூட்டுறவு நகை கடன் அதிரடி உயர்வு: கிராமுக்கு ரூ.10,000 கடன்! தமிழக அரசு அறிவிப்பு!

    கூட்டுறவு நகை கடன் அதிரடி உயர்வு: கிராமுக்கு ரூ.10,000 கடன்! தமிழக அரசு அறிவிப்பு!

    தமிழ்நாடு
    TTF வாசன் Vs ஜேசன்.. என்ட்ரி கொடுத்த முதல் நாளே அடிதடி.. களேபரமான பிக்பாஸ் வீடு..!!

    TTF வாசன் Vs ஜேசன்.. என்ட்ரி கொடுத்த முதல் நாளே அடிதடி.. களேபரமான பிக்பாஸ் வீடு..!!

    தொலைக்காட்சி
    தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி..!! சென்னையில் 11ம் தேதி ‘ரோடு ஷோ’..!! விறுவிறு ஏற்பாடுகள்..!!

    தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி..!! சென்னையில் 11ம் தேதி ‘ரோடு ஷோ’..!! விறுவிறு ஏற்பாடுகள்..!!

    தமிழ்நாடு
    பிரதமர் வருகையும், மெட்ரோ திறப்பு பணிகளும்..! தலைமைச் செயலர் முக்கிய ஆலோசனை.!

    பிரதமர் வருகையும், மெட்ரோ திறப்பு பணிகளும்..! தலைமைச் செயலர் முக்கிய ஆலோசனை.!

    தமிழ்நாடு

    செய்திகள்

    மழை வரப்போகுது.. குடை கொண்டு போங்க மக்களே..! 27 மாவட்டங்களுக்கு அலர்ட்..!!

    மழை வரப்போகுது.. குடை கொண்டு போங்க மக்களே..! 27 மாவட்டங்களுக்கு அலர்ட்..!!

    தமிழ்நாடு

    "படிவம் 6ஐ ஞானேஷ்குமார் மாற்றியது அம்பலம்"..! உச்ச நீதிமன்றத்தை சுட்டிக்காட்டிய ராகுல் காந்தி..!!

    தமிழ்நாடு
    கூட்டுறவு நகை கடன் அதிரடி உயர்வு: கிராமுக்கு ரூ.10,000 கடன்! தமிழக அரசு அறிவிப்பு!

    கூட்டுறவு நகை கடன் அதிரடி உயர்வு: கிராமுக்கு ரூ.10,000 கடன்! தமிழக அரசு அறிவிப்பு!

    தமிழ்நாடு
    தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி..!! சென்னையில் 11ம் தேதி ‘ரோடு ஷோ’..!! விறுவிறு ஏற்பாடுகள்..!!

    தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி..!! சென்னையில் 11ம் தேதி ‘ரோடு ஷோ’..!! விறுவிறு ஏற்பாடுகள்..!!

    தமிழ்நாடு
    பிரதமர் வருகையும், மெட்ரோ திறப்பு பணிகளும்..! தலைமைச் செயலர் முக்கிய ஆலோசனை.!

    பிரதமர் வருகையும், மெட்ரோ திறப்பு பணிகளும்..! தலைமைச் செயலர் முக்கிய ஆலோசனை.!

    தமிழ்நாடு
    கிராமிய கலைஞருக்கு அங்கீகாரம்...! தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்ற தலைவராகிறார் புஷ்பவனம் குப்புசாமி..!

    கிராமிய கலைஞருக்கு அங்கீகாரம்...! தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்ற தலைவராகிறார் புஷ்பவனம் குப்புசாமி..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share