கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் சிறுவர்கள் இருவர் உட்பட நான்கு பேர் காயமடைந்தனர்.
கோயம்புத்தூரை சேர்ந்த 35 வயதான உபாசனா என்ற பெண் சென்னையில் உள்ள தனியார் ஐடி கம்பெனியில் பணிபுரிவதாக கூறப்படுகிறது. இவர் தனது இரண்டு பிள்ளைகள், கணவர், மாமியார் மற்றும் உறவினர் என மொத்தம் ஆறு பேரை ஒரே காரில் சென்னையிலிருந்து கோயம்புத்தூருக்கு உளுந்தூர்பேட்டை வேப்பூர் வழியாக அழைத்துச் சென்றுள்ளார்.
அப்பொழுது சின்னசேலம் அருகே உள்ள வேப்பூர் சேலம் தேசிய நெடுஞ்சாலையில்சென்று கொண்டிருந்த போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரமாக இருந்த மரத்தின் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் ஓட்டி வந்த உபாசனா என்ற பெண் தலை துண்டித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அந்த காரில் பயணித்த உபாசனாவின் மாமியாரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.
இதையும் படிங்க: கேஸ் விலை உயர வாய்ப்பு?! கத்தாரை கதறவிடும் ஈரான்! எரிவாயு ஏற்றுமதியில் விழுந்த ஓட்டை!
மேலும் காரில் பயணம் செய்த இரண்டு சிறுவர்கள் உட்பட நான்கு பேர்பலத்த காயங்களுடன் ஆபத்தான முறையில் சின்னச்சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த கீழ்குப்பம் போலீசார் விசாரணை மேற்கொண்டு போக்குவரத்தை சரி செய்தனர். இந்த விபத்தால் வேப்பூர் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கூட்டணிக்காக விஜய் வீட்டு வாசலை தட்டும் எடப்பாடி..! குழிதோண்டி புதைச்சுட்டாங்க... ஓபிஎஸ் விமர்சனம்..!!