கிணத்துக்கடவு அருகே கோவை பொள்ளாச்சி நான்கு வழி சாலையில் ஏலூர் பிரிவு பகுதியில் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் இன்று மாலை வழக்கம் போல் பள்ளி முடிந்து சாலையை கடக்க மாணவர்கள் உடற்பயிற்சி ஆசிரியருடன் நான்கு வழிச்சாலையில் கடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது கோவையில் இருந்து வந்த கார், சாலை கடந்த மாணவர்கள் மீது மோதியது. இதை நேரில் கண்ட மற்ற மாணவர்கள் கூச்சலிட்டனர். இதனால் 12 மாணவர்கள் காயமடைந்தனர். இதனை யடுத்து அருகில் இருந்த பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள் ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்து காயம் அடைந்த மாணவர்களை சிகிச்சைக்காக கோவை பொள்ளாச்சி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இந்த விபத்தில் 12 மாணவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக கிணத்துக்கடவு போலீசார் தெரிவித்தனர் தனியார் பள்ளியிலிருந்து நான்கு வழி சாலையை கடக்கமுயன்ற மாணவர்கள் மீது கார் மோதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: குஜராத் பாலம் இடிந்து விபத்து.. பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு..!
இந்த சம்பவம் குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்து காரை ஓட்டி வந்த நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: காலையிலேயே அதிர்ச்சி.. நேருக்கு நேருக்கு மோதி நொறுங்கிய லாரிகள்.. மூவர் உடல் நசுங்கி பலி..!