மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் உள்ள டைம் கீப்பர் அலுவலகத்தில் கடந்த 9 தேதி இரவு தாராபுரம் காளிபாளையம் பகுதியைச் சேர்ந்த கணேசன் என்ற அரசு பேருந்து ஓட்டுநரை காலணியால் அடித்தும் அவதூறாக பேசியதாக கரிமேடு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் கீழ் அரசு போக்குவரத்து கழக உதவி மேலாளர் மாரிமுத்து உள்ளிட்ட நான்கு பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் கரிமேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பயணிகளுடன் வாக்குவாதம்:
மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து திண்டுக்கல், கொடைக்கானல், ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் அதிக அளவில் பேருந்துகள் இயக்கப்பட்டன. அன்று இரவு ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து தாராபுரம் நோக்கி செல்லும் அரசுப்பேருந்தை கணேசன் என்பவர் இயக்கி உள்ளார்.
இதையும் படிங்க: ஏசி பயன்பாட்டில் முக்கிய மாற்றம் - மத்திய அரசு அதிரடி அறிவிப்பு...!

அப்போது தாராபுரம் செல்வதற்கு பயணிகள் நீண்ட நேரமாக பேருந்தில் பயணிகள் ஏறி அமர்ந்திருந்த சூழலில் அதிகாரிகள் உத்தரவின்றி பேருந்தை எடுத்து செல்ல முடியாது என பேருந்து ஓட்டுநர் கணேசன் தெரிவித்ததாகவும், மேலாளரிடம் அனுமதி வாங்கி வர பயணிகளிடம் கணேசன் சொல்லியதாகவும் கூறப்படுகிறது
அதிர்ச்சியூட்டும் சம்பவம்:

அப்போது பயணிகளிடம் மேலாளர் மாரிமுத்து, "நீங்கள் என்ன முன்பதிவு செய்தீர்களா? என்னிடம் இது போன்று பேசினால் நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்குப் போய் சேர முடியாது," என்று கூறியுள்ளார். இந்த சம்பவத்தைக் கண்ட அருகில் இருந்த அதிகாரிகள் பயணிகளுக்கு ஆதரவாகப் பேசியுள்ளனர். இதனால் பயணிகளுக்கும், உதவி மேலாளருக்கும் இடையேயான வாக்குவாதம் மேலும் முற்றியது. அப்போது சம்பவ இடத்திற்கு வந்த பேருந்து ஓட்டுநர் கணேசனை அதிகாரிகள் கடுமையாகத் திட்டினர். பின்னர் அவரை அலுவலகத்திற்குள் அழைத்துச் சென்றனர். அங்கு, உதவி மேலாளர் மாரிமுத்து திடீரென்று தனது காலில் இருந்து செருப்பைக் கழற்றி ஓட்டுநர் கணேசனை கடுமையாகத் தாக்கியுள்ளார். அங்கிருந்த பயணிகள் வீடியோ எடுத்து நிலையில் அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவியது.
பணிநீக்கம்:
இதுதொடர்பாக மதுரை அரசு போக்குவரத்து கழக அதிகாரிள் விசாரணை மேற்கொண்ட நிலையில், வீடியோ பரவிய நிலையில் பேருந்து நிலைய உதவி மேலாளர் மாரிமுத்து ஓட்டுனரை அடித்த காரணத்திற்காக மாரிமுத்துவை தற்காலிக பணிநீக்கம் செய்து மதுரை மண்டல போக்குவரத்து நிர்வாக இயக்குனர் இளங்கோவன் உத்தரவிட்டிருந்தார்.

இதனிடையே ஓட்டுநரை செருப்பால் தாக்கிய மேலாளர் மாரிமுத்து மன்னிப்பு கோரி வீடியோ ஒன்றினை வெளியிட்டிருந்தார். அதில், “என்னால் போக்குவரத்து கழகத்திற்கு அவப்பெயர் வேண்டாம். செருப்பால் தாக்கிய ஓட்டுநர் கணேசன் இடமும், தமிழக அரசிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: காலையிலேயே பயங்கரம்... கார் மோதி பழனிக்கு பாதயாத்திரை சென்ற 3 பக்தர்கள் துடிதுடித்து பலி..!