தமிழக பாஜகவில் பட்டியல் இன மக்களுக்கு பொறுப்புகள் வழங்கப்படாமல் ஒதுக்கப்படுவதாக பாஜகவிற்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை மாற்றப்பட்டு நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். நயினார் நரேந்திரன், நீங்கள் தேவேந்திரன் என கூறி தேவேந்திர குல வேளாளர் மக்களை உலகிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி எடுத்துக்காட்டினார்.

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மையக்குழு மற்றும் முக்கிய பொறுப்புகளில் தேவேந்திரகுல வேளாளர் மக்களை சேர விடாமல் தடுப்பது யார்? யார் அந்த சார்? தவறை திருத்திக் கொள்ளுமா தமிழக பாஜக என வசனங்கள் அடங்கிய சுவரொட்டிகளை ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 3 நாள் டைம்..! காவல்துறைக்கு கெடு.. தெய்வச்செயல் பிரச்சனையில் தலையிட்ட தேசிய மகளிர் ஆணையம்..!
தாமரை சின்னத்தின் மேல் 2026 கேள்விக்குறி என்ற படமும் அந்த சுவரொட்டியில் இடம்பெற்றுள்ளது. தமிழக பாஜகவில் பட்டியலின மக்களுக்கு பொறுப்புகள் கொடுக்க விடாமல் தடுப்பது குறித்து ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அன்புமணி IN or OUT - குட்டையைக் குழப்பும் ராமதாஸ்... குழப்பத்தில் பாமக தொண்டர்கள்!