காஷ்மீரில் கடந்த 22 ஆம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அங்கு இருந்த சுற்றுலாப் பயணிகள் சுமார் 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர். காஷ்மீரில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி, அதன்படி, பாகிஸ்தானுடனனா சிந்து நதி நீர் ஒப்பந்தம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது, பாகிஸ்தானியர்கள், இந்தியாவை விட்டு 48 மணிநேரத்தில் வெளியேற கெடு விதிக்கப்பட்டது, வாகா, அட்டாரி எல்லைகள் மூடப்பட்டன, பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் ஒரு வாரத்தில் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டது, பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.

மேலும் சிந்து நதியில் இருந்து பாகிஸ்தானுக்கு நீர் திறந்துவிடப்படுவது நிறுத்தப்பட்டது. இதற்கிடையே சமீபத்தில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி தருவது தொடர்பாக அனைத்து முடிவுகளையும் எடுக்க ராணுவத்திற்குப் பிரதமர் முழுச் சுதந்திரத்தை அளித்திருந்தார். இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நாளை (ஏப்ரல் 7) நாடு முழுக்க உள்ள 259 இடங்களில் போர் கால பாதுகாப்பு ஒத்திகையை மேற்கொள்ள மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் கல்பாக்கம், துறைமுகம் ஆகிய 2 இடங்களை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது.
இதையும் படிங்க: மோடி பற்றி சர்ச்சையை கிளப்பிய மல்லிகார்ஜுன கார்கே... கடுமையாக விமர்சித்த பாஜக!!

இதுக்குறித்து தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுரைப்படி, போர் ஒத்திகை நிகழ்ச்சி கல்பாக்கம் அணுமின் நிலையம் மற்றும் சென்னை துறைமுகத்தில் நாளை 4 மணிக்கு நடைபெற உள்ளது. எந்த அவசரகால சூழ்நிலையை எப்படி எதிர்கொள்வது குறித்து இந்த பயிற்சியின் போது ஆய்வு செய்யப்படும். சென்னை எழிலகத்தில் உள்ள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில், மாநில அவசர கால செயல்பாட்டு மையம் செயல்படும். இந்த போர் ஒத்திகையின் போது, மாவட்ட ஆட்சியர் தலைமையிலான மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம், போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறையினர் பங்கு கொள்வார்கள். மாலை 4 மணி முதல் 4:30 மணி வரை இப்பயிற்சி நடக்க உள்ளது.

இந்த பயிற்சி தொடர்பாக சம்பந்தப்பட்ட மத்திய மற்றும் மாநில அதிகாரிகளுடன் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை செயலர், வருவாய் பேரிடர் மேலாண்மை ஆணையர், டிஜிபி, கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் திட்ட இயக்குநர், சென்னை துறைமுகத்தின் தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சம்பந்தப்பட்ட இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி உள்ளன என்பதை ஆய்வு செய்வதற்காக இந்த ஒத்திகை நடக்கிறது. மற்ற இடங்களில் வழக்கம் போல் பணிகள் நடக்கும். இந்த ஒத்திகையால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: எனது அலுவலகத்தையே தரேன்; போர் வேண்டாம்... ஐநா பொதுச்செயலாளர் அட்வைஸ்!!