மழைநீர் தேங்குவதால் சாக்கடைகள் மறைந்து போவதால் ஏற்படும் விபத்துகள் நகர்ப்புறங்களில் ஒரு மறைமுகமான அச்சுறுத்தலாகத் திகழ்கின்றன. இந்தப் பிரச்சினை இந்தியாவின் பல நகரங்களில், குறிப்பாக சென்னை, மும்பை, டெல்லி போன்ற நகரங்களில் நிகழ்கிறது. மழை பெய்யத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே சாலைகள் நீர்த்தேக்கமாக மாறி, சாக்கடைகள் இருக்கும் இடம் தெரியாமல் மூழ்கி போகின்றன. இதனால் விபத்துகள் ஏற்படுகின்றன.
சாக்கடைகள் மூடப்படாமல் இருப்பதாலும், சாக்கடையின் மூடிகள் உடைந்து இருப்பதாலும் விபத்துகள் நிகழ்கிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை பெய்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியது. அவ்வப்போது தண்ணீரை அகற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் சில இடங்களில் சிறிதளவு மழை பெய்தாலும் தண்ணீர் தேங்கும் நிலை இருக்கிறது.

சாலைகளில் தண்ணீர் தேங்குவதால் பள்ளங்கள், சாக்கடை குழிகள் போன்றவை இருப்பது தெரியாமல் போகிறது. அப்படியாக ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. சென்னை கொருக்குப்பேட்டையில் மழைநீர் தேங்கியதால் சாக்கடை தெரியாமல் குழந்தை குழிக்குள் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மழையின் காரணமாக சென்னை கொருக்குப்பேட்டையில் சுகந்தரபாளையம் இரண்டாவது தெருவில் தண்ணீர் தேங்கி இருக்கிறது. இந்த நிலையில் மூன்று வயது குழந்தை ஒன்று தண்ணீரில் நடந்து சென்ற போது சாக்கடை இருப்பது தெரியாமல் விழுந்தது.
இதையும் படிங்க: #BREAKING: சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்… சும்மா பூந்து விளாச போகுது மழை… எச்சரிக்கை..!
குழந்தை சாக்கடைக்குள் விழுந்ததும் பதறி ஓடிச் சென்று தாய் தூக்கி உள்ளார். சாக்கடையின் கான்கிரீட் மூடி பாதி உடைந்த நிலையில் இருந்ததால் குழந்தை முழுவதுமாக உள்ளே செல்லாமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. மழை காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: 23 மாவட்டங்களில் கனமழை... சென்னைக்கு "HIGH ALERT"..! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு...!