சென்னையின் போக்குவரத்து நெரிசலில், ஒரு நம்பகமான சேவையாக மாறி உள்ளது சென்னை மெட்ரோ ரயில். 2015-ஆம் ஆண்டு ஜூன் 29 அன்று தொடங்கப்பட்ட இந்த சேவை, மெதுவாகவும் உறுதியாகவும் மக்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு அவசியமான பகுதியாக மாற்றமடைந்துள்ளது.
2025-ஆம் ஆண்டு அக்டோபரில், இது வெறும் போக்குவரத்து அமைப்பாக மட்டுமல்லாமல், நகரின் உணர்ச்சி இணைப்புகளையும் பிரதிபலிக்கிறது. கோயம்பேடு முதல் விம்சோ நகர் வரை நீண்ட 54.1 கி.மீ. தொலைவில் பரவியுள்ள இந்த வலையமைப்பு, இரண்டு முக்கிய வரிசைகளை கொண்டுள்ளது.

41 நிலையங்களுடன் இயங்குகிறது. இதன் மூலம், சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளை இணைத்து, லட்சக்கணக்கான மக்களின் பயணங்களை எளிதாக்குகிறது. இந்த சேவையின் வளர்ச்சி, அதன் பயன்பாட்டின் உச்சத்தை அடைந்துள்ளது. 2025-ஆம் ஆண்டின் ஜூலை மாதத்தில், மெட்ரோ ரயிலில் 1.03 கோடிக்கும் மேற்பட்ட பயணிகள் பயன்படுத்தியுள்ளனர். இது தொடக்க காலமான 2015 முதல் இதுவரை முதல் முறையாக ஒரு மாதத்தில் கடந்து வந்த மைல்கல்.
இதையும் படிங்க: தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை... தடையில்லா மின்சாரம்!... தமிழக அரசு உத்தரவு...!
இந்த நிலையில், Community of metro எனும் நிறுவனம் மெட்ரோ ரயில்களில் பயணிகளின் திருப்தி குறித்த ஆய்வை நடத்தியது. உலகெங்கிலும் சுமார் 32 ரயில் நிறுவனங்கள் பங்கேற்ற நிலையில், சென்னை மெட்ரோ முதலிடம் பிடித்தது.
இதையும் படிங்க: அடிதூள்..!! இதல்லவா ஒரு சர்ப்ரைஸ்..!! அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு..!!