சென்னை குடிநீர் வாரியத்தின் லாரியினுடைய ஒப்பந்த லாரிகளுடைய உரிமையாளர்கள் வரக்கூடிய ஜூன் ஐந்தாம் தேதியிலிருந்து வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்திருக்கிறார்கள். முன்னதாக இந்த போராட்டமானது நாளை முதல் தொடங்கவிருந்த நிலையில் தற்போது தேதி மாற்றப்பட்டுள்ளது. ஒப்பந்த லாரிகளுக்காக கொடுக்கப்பட்டிருக்கக்கூடிய ஒப்பந்தம் காலாவதியான பிறகும் கூட அந்த ஒப்பந்தம் நீட்டிக்கப்படுகிறதே தவிர அது முறையாக அந்த ஒப்பந்தத்திற்கான பணியாணைகள் மீண்டும் வழங்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் மெட்ரோ குடிநீர் லாரி உரிமையாளர்கள் உரிய பணியாணையை உடனடியாக வழங்க வேண்டும் என்று பல நாட்களாக வலியுறுத்தி வருகின்றனர்.

ஏறக்குறைவு ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பணி ஆணை வழங்கப்படாமல் இருக்கக்கூடிய சூழலில், இந்த மன அழுத்தத்தில் இரண்டு ஒப்பந்த லாரி உரிமையாளர்கள் மரணித்திருப்பதாகவும் சங்கத்தினர் குற்றச்சாட்டியுள்ளனர். இதனை தொடர்ந்து உடனடியாக ஒப்பந்த லாரிகளுக்கு பணியாளிகளை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி நாளை முதல் வேலை நிறுத்த போராட்டம் செய்வதாக அறிவித்திருந்த நிலையில், இந்த வேலை நிறுத்த போராட்டம் ஜூலை ஐந்தாம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுவதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.

ஜூலை 5 முதல் இந்த சென்னை குடிநீர் வாரியத்தினுடைய ஒப்பந்த லாரிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் விடுமுறை என்பதாலும், திங்கட்கிழமை முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளதாலும், மெட்ரோ குடிநீர் மேலாண்மை இயக்குனர் சென்னையில் இல்லை என்பது காரணத்தினாலயும் பொதுமக்களுடைய நலன் கருதி இந்த போராட்டத்தை ஜூலை 5ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக மெட்ரோ குடிநீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: அன்புமணி வீடு தேடி சென்ற அந்த இருவர்.. பாமகவில் உச்சக்கட்ட பதற்றம்..!
இதையும் படிங்க: எத்தனை விமானங்களை இந்தியா இழந்தது? மோடி மறைத்த ரகசியம்.. போட்டுடைத்த முப்படைகளின் தலைமை தளபதி..!