சென்னை திருவான்மியூர் பகுதியில் உள்ள டைடல் பார்க் அருகே உள்ள சாலை (ஓஎம்ஆர்) இன்று காலை திடீரென உள்வாங்கி பெரிய பள்ளம் உருவானது. இந்த சம்பவத்தில் வெள்ளை நிற சொகுசு கார் ஒன்று பள்ளத்தில் சிக்கி தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. காரை ஓட்டிவந்த நபர் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
இந்தப் பகுதி சென்னையின் முக்கிய ஐடி காரிடார் என்பதால் காலை நேரங்களில் வாகன நெரிசல் அதிகமாக இருக்கும். வாகனங்கள் வரிசையாகச் சென்று கொண்டிருந்த நிலையில், சாலையின் ஒரு பகுதி திடீரென சரிந்து சுமார் 5 முதல் 10 அடி ஆழமுள்ள பள்ளம் ஏற்பட்டது. அப்போது அந்த வழியாகச் சென்ற கார் முதலில் லேசாக சாய்ந்தது.
உடனே சுதாரித்த ஓட்டுநர் காரிலிருந்து இறங்க, பின்னர் வாகனம் முழுமையாகப் பள்ளத்தில் உருண்டு விழுந்தது. இக்காட்சிகள் வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டு சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போக்குவரத்து காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் காரை மீட்கும்
இதையும் படிங்க: ராகுலுக்கு நோ... மோடிக்கு ஓகே! முதல்வர் விஜய்யின் அரசியல் நகர்வால் காங்கிரசில் அதிர்ச்சி? பரபரக்கும் அரசியல்!
மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறும் இடத்திற்கு அருகே இந்தச் சம்பவம் நடந்ததால், சுரங்கப் பணிகளின் அதிர்வுகள் காரணமாக சாலை உள்வாங்கியிருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகின. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இதுவரை உறுதியான காரணத்தை அறிவிக்கவில்லை. சென்னையில் இதுபோன்ற திடீர் பள்ளங்கள் புதிதல்ல. 2017-இல் அண்ணா சாலையில் சர்ச் பார்க் பள்ளி அருகே பெரிய பள்ளம் ஏற்பட்டு பேருந்தும் காரும் சிக்கின.
https://x.com/anaghakesav/status/2108079108223803637/video/1
அடுத்த ஆண்டு அமெரிக்கத் தூதரகம் அருகே 10 அடி பள்ளம் தோன்றியது. 2021-இல் காரம்பாக்கத்தில் கார் சக்கரம் பள்ளத்தில் புதைந்தது. 2022-இல் ஆழ்வார்பேட்டையில் கழிவுநீர் லாரி சிக்கியது. இவை அனைத்தும் மெட்ரோ சுரங்கப் பணிகள், நிலத்தடி குழாய் கசிவுகள் அல்லது மண் அரிப்பு காரணமாக ஏற்பட்டவை.
நகரின் வளர்ச்சிப் பணிகள் வேகமாக நடைபெறும் நிலையில், சாலைப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் அவசியம் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். அதிகாரிகள் பள்ளத்தை விரைவில் சரிசெய்து சாலையை மீண்டும் திறக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: 6 வயது சிறுமியை தனியே கூட்டி சென்று 3 பேர் செய்த அதிபயங்கரம்... வடமாநில இளைஞர்களை விரட்டி, விரட்டி வெளுத்த மக்கள்...!