சென்னை வேளச்சேரியில், நேற்று முன்தினம் இரவு கணவருடன் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் காவல் ஆய்வாளரை, வேளச்சேரி போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் மணிமாறன், ராணிப்பேட்டை மாவட்டத்தில் போக்குவரத்து காவல் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அவர் சென்னை வேளச்சேரியில் உள்ள தனது வீட்டிற்கு வந்து, தனது மைத்துனருடன் மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. பின்னர், இருவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, வேளச்சேரி வரண்டியம்மன் கோயில் தெருவில் கணவருடன் நடந்து சென்ற பெண் ஒருவரை கடந்துள்ளனர்.
அப்போது, மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படும் மணிமாறன், இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்தபடி அந்தப் பெண்ணின் பின்னால் கையை வைத்து அத்துமீறி நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: இன்ஸ்டாவில் மாஸ் காட்டும் விஜய்..!! ராகுலை பின்னுக்குத் தள்ளிய 1.87 கோடி ஃபாலோவர்ஸ்..!!
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண், வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் போக்குவரத்து காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த மணிமாறனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல் அதிகாரியே, மதுபோதையில் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாகக் கூறப்படும் இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஆளுநர் விழாவில் பங்கேற்காதது ஏன்? டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் விளக்கம்..!!