தமிழ்நாடு குழந்தைகள் உரிமை கண்காணிப்பகம் சார்பாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கும் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரிக்கும் கடிதம் எழுதப்பட்டிருக்கிறது. அதேபோல விஜய்க்கும் கண்டன கடிதம் எழுதப்பட்டிருக்கிறது. குழந்தைகளை வைத்து பரப்புரை செய்யக்கூடாது என 2023 ஆம் தேதி 23 ஆம் ஆண்டே தேர்தல் ஆணையம் வகுத்திருக்கக்கூடிய விதிமுறைகளை மீறிய செயலாக விஜயின் பரப்புரை இருந்ததாக அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், குழந்தைகளை வைத்து வீடியோ தயாரித்தது தவறு என விஜய் பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் விஜய்க்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து எழுதப்பட்டுள்ள கடிதத்தில், “அரசியல் நோக்கங்களுக்காக குழந்தைகளை பகடை காய்களாக பயன்படுத்துவது கண்டனத்திற்குரியது. குழந்தைகள் அழுவது, பிடிவாதமாக நடப்பது போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. குழந்தைகள் மூலம் வாக்காளர்களை பாதிப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது. குழந்தைகளை பயன்படுத்தி வீடியோக்கள் உருவாக்குவதை விஜய் நிறுத்த வேண்டும். உணர்ச்சி ரீதியான மிரட்டல்களை விடுக்கும் வகையிலான ரீல்ஸ், ஷார்ட்ஸ்களை தவிர்க்க வேண்டும். பொதுமக்களிடமும் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும்” எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கடந்த 21 ஆம் தேதி சென்னையில் நடந்த இறுதி கட்ட பரப்புரையின் போது "விஜய் மாமாவிற்கு" உங்களுடைய பெற்றோரிடம் அடம் பிடித்து விசில் சின்னத்திற்கு வாக்களிக்க வையுங்கள் என கோரிக்கை வைத்தார். அதாவது “ குட்டீஸ்களே, உங்களுக்கு ஒரு சாக்லேட்டோ அல்லது பொம்மையோ வேணும்னா அடம்பிடிச்சு வாங்குவீங்கல்ல? அதே மாதிரி, இந்த 'விஜய் மாமா' ஜெயிக்கணும்னு உங்க வீட்டுப் பெரியவங்ககிட்ட அடம்பிடிச்சு நம்ம விசில் சின்னத்துக்கு ஓட்டு போட வைங்க," என பேசியிருந்தார்.
இதையும் படிங்க: பட்டு வேஷ்டி சட்டையில் நள்ளிரவில் மதுரை வந்த விஜய்... அதிகாலையில் திருச்செந்தூர் முருகன் கோயிலில் வழிபாடு...!
இந்த நிலையில் விஜய் வைத்த கோரிக்கையின் காரணமாக தன்னுடைய ஐந்து வயது மகன் "விஜய்யின் விசில் சின்னத்திற்கு" வாக்களிக்க அடம் பிடித்ததால் கடும் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், குழந்தைகள் உளவியல் ரீதியாக பாதிக்க காரணமான விஜய் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவையை சேர்த்த விசிக நிர்வாகி பாலகிருஷ்ணன் என்பவர் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: விஜயின் அமைச்சரவை பட்டியல்... இல்லாத ஊருக்கு வழி..! சேகர்பாபு விமர்சனம்..!