தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தேர்தல் பிரசாரம் முடிந்த கையோடு, கடந்த 4 நாட்களாக சென்னையில் உள்ள தனது வீட்டில் ஓய்வெடுத்தார். இதனிடையே இன்று அதிகாலை திருச்செந்தூர் முருகன் கோயிலில் விஜய் திடீரென சாமி தரிசனம் செய்தார்.
இந்த நிலையில் திருச்செந்தூர் செல்வதற்காக சென்னையில் இருந்து தனி விமானத்தில் மதுரை வந்தார் விஜய். விஜய் மதுரை வருவதாக செய்தி கசிந்ததுமே ஏராளமான தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் மதுரை விமான நிலையத்தில் குவிய ஆரம்பித்தனர். நள்ளிரவில் மதுரை விமானநிலையத்தில் வந்தடைந்த விஜய்க்கு, ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். வழக்கமாக வெள்ளை சட்டை, காக்கி பேண்ட் அணிந்து கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த விஜய், பட்டு, வேஷ்டி சட்டையில் படு உற்சாகமாக காணப்பட்டார்.
விஜய்யின் காரின் மீது பூக்களை தூவியும் ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதனால் விஜய் கார் அங்கிருந்து புறப்பட சிறிது நேரமானது. போலீசார் கார் செல்வதற்கு வழி ஏற்படுத்தி கொடுத்ததையடுத்து, அங்கிருந்து விஜய் புறப்பட்டு சென்றார்.
தனி கார் மூலம் மதுரையில் இருந்து அருப்புக்கோட்டை பைபாஸ் சாலை மார்க்கமாக திருச்செந்தூர் வருகை தந்தார். திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் பேட்டரி கார் மூலம் ஏறியவர் கோவில் வாசல் வந்து இறங்கினார். கடற்கரையில் காலை நனைத்துவிட்டு கோவில் சண்முக விலாச மண்டபத்தில் விஜய்க்கு பூரண கும்ப மரியாதை கட்சி சார்பாக அளித்தனர்.
அதனை தொடர்ந்து சாலை மார்க்கமாக திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குச் சென்றவர் பட்டு வேட்டி மேல் துண்டு அணிந்து அதிகாலையில் நடந்த விஸ்வரூப தரிசனத்தில் பங்கேற்றார். திருச்செந்தூர் கோவில் நிர்வாகம் சார்பாக விஜய்க்கு வேல் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் பூரண கும்ப மரியாதையும் வழங்கப்பட்டது. இந்த தரிசனத்தின் போது விஜய் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் மற்றும் ரூட் தயாரிப்பு நிறுவனத்தின் தலைவர் ஜெகதீஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.
மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, தட்சிணாமூர்த்தி, பெருமாள், சத்ரு சம்ஹார மூர்த்தி உள்ளிட்ட பரிவார தெய்வங்களை வணங்கினார. சுவாமி தரிசனம் செய்துவிட்டு விஜய் வடக்கு வாசல் வழியாக சென்றதால் கோயில் முன்பு நின்ற கட்சியினர் பொதுமக்கள் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
தொடர்ந்து வெளியே வந்து அவரை பார்த்து கோவிலுக்கு வருகை தந்த பொதுமக்கள் பக்தர்கள் மற்றும் தமிழக வெற்றிக்கழக தொண்டர்கள் இளைஞர்கள் கையை அசைத்தனர். கோவிலுக்கு வரும் பொழுது பேட்டரி காரை சுற்றிலும் கட்சி தொண்டர்கள் பக்தர்கள் அனைவரும் செல்போனில் புகைப்படம் எடுத்து டி வி கே, விஜய், வாழ்க என்று கோஷமிட்டனர் இதனால் கோயில் வளாகமே ஒரே பரபரப்பாக காணப்பட்டது.
இதையும் படிங்க: விஜயின் அமைச்சரவை பட்டியல்... இல்லாத ஊருக்கு வழி..! சேகர்பாபு விமர்சனம்..!
தொடர்ந்து திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனத்தை முடித்து விட்டு விஜய் புறப்பட்டுள்ளார். மீண்டும் மதுரை வந்து அங்கிருந்து தனி விமானத்தில் சென்னை செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: விஜய்க்கு எதிரான வழக்கு தள்ளுபடி..! சொத்து விபரங்கள் ஆய்வு செய்யக்கோரி மனு மீது அதிரடி உத்தரவு..!