சீனாவின் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சி மாகாணத்தில், இலி கசாக் தன்னாட்சி பிரிவின் ஜாவோசு மாவட்டத்தில் உள்ள சியாட்டா சுற்றுலா மையத்தில் கயிறு தொங்குப்பாலம் ஒன்று அறுந்து விபத்து ஏற்பட்டது. இந்த பயங்கர விபத்தில் நீரற்ற பாறைகள் நிறைந்த ஆற்றுக்குள் விழுந்து 5 சுற்றுலாப் பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 24 பேர் காயமடைந்தனர். சுமார் 29 சுற்றுலாப் பயணிகள் பாலத்தில் இருந்தபோது, பாலத்தின் ஒரு பக்க கயிறு அறுந்ததால் பாலம் சாய்ந்து, மக்கள் கீழே விழுந்தனர்.

சமூக ஊடகங்களில் பரவிய காணொளிகளில், பாலம் ஒரு பக்கமாக சரிந்து, மக்கள் தொங்கிய நிலையில் இருப்பது பதிவாகியுள்ளது. மோசமான பராமரிப்பு மற்றும் பாலத்தில் ஒரே நேரத்தில் அதிகமானோர் இருந்ததே விபத்துக்குக் காரணம் எனக் கருதப்படுகிறது. சின்ஹுவா செய்தி முகமை இந்த விபத்து குறித்து அறிக்கை வெளியிட்டு, மீட்பு பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டதாக தெரிவித்தது.
இதையும் படிங்க: இந்தியாவை மட்டும் டார்கெட் செய்வது ஏன்? இன்னும் நிறையா பாக்கப்போறீங்க! ட்ரம்ப் வார்னிங்..

காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் சுற்றுலா மையங்களில் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் பராமரிப்பு நடைமுறைகளின் முக்கியத்துவத்தை மீண்டும் உணர்த்தியுள்ளது. உள்ளூர் அதிகாரிகள் இந்த விபத்து குறித்து விசாரணை தொடங்கியுள்ளனர், மேலும் பாலத்தின் கட்டமைப்பு பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்து மறு ஆய்வு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வண்டி, வண்டியாக கொட்டப்போகும் வரிப்பணம்.. பலகோடி டாலர் வசூல்!! குதூகலத்தில் ட்ரம்ப்..!