சீனாவின் தியான்ஜின் நகரத்துல ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 1 வரை நடக்கப் போற 25வது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்.சி.ஓ) மாநாட்டுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி செல்லப் போறாரு. இதுக்காக சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி மோடிக்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுத்திருக்காரு.
2020-ல கல்வான் பள்ளத்தாக்குல இந்திய-சீன வீரர்கள் மோதிக்கொண்ட பிறகு மோடி சீனாவுக்கு போறது இதுதான் முதல் தடவை. இந்த மாநாடு ஒற்றுமை, நட்பு, பயனுள்ள முடிவுகளை எடுக்குறதுக்கு ஒரு முக்கியமான வாய்ப்பா இருக்கும்னு சீனா சொல்லியிருக்கு.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு 2001-ல சீனாவும் ரஷ்யாவும் இணைஞ்சு தொடங்கினது. இதுல இந்தியா, பாகிஸ்தான், ஈரான் உட்பட 10 நாடுகள் உறுப்பினர்களா இருக்காங்க. இந்த அமைப்பு பொருளாதார ஒத்துழைப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, பிராந்திய பாதுகாப்பு, அமைதியை உறுதி செய்யறதுல கவனம் செலுத்துது. இந்த மாநாட்டுல உறுப்பு நாட்டு தலைவர்கள் கூடி முக்கியமான விஷயங்களைப் பேசி முடிவு எடுப்பாங்க.
இதையும் படிங்க: சீனாவில் அறுந்து விழுந்த தொங்குப்பாலம்.. 5 பேர் பலி.. 24 பேர் படுகாயம்..!!
சீன வெளியுறவு அமைச்சகத்தோட செய்தித்தொடர்பாளர் குவோ ஜியாகுன் இது பத்தி பேசும்போது, “தியான்ஜின் மாநாட்டுக்கு மோடியை வரவேற்கிறோம். இது ஒற்றுமையையும் நட்பையும் வளர்க்கும், பலனளிக்கும் முடிவுகளை எடுக்குற ஒரு கூட்டமா இருக்கும். எஸ்.சி.ஓ இன்னும் உயர்ந்த ஒருங்கிணைப்பு, உற்பத்தித்திறனோட புது கட்டத்துக்கு போகும்னு நம்புறோம்”னு சொல்லியிருக்காரு.

இந்த மாநாட்டுல பொருளாதார ஒத்துழைப்பு, வர்த்தகம், பயங்கரவாத எதிர்ப்பு, எரிசக்தி ஒத்துழைப்பு, காலநிலை மாற்றம் மாதிரியான முக்கியமான விஷயங்கள் பேசப்படும். இந்தியாவோட பங்கேற்பு, குறிப்பா சீனா, ரஷ்யாவோட உறவுகளை மேம்படுத்தறதுக்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பமா இருக்கும். 2020 கல்வான் மோதலுக்குப் பிறகு இந்திய-சீன உறவுல சில பதற்றங்கள் இருந்தாலும், இந்த மாநாடு இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைக்கு ஒரு வாய்ப்பா அமையலாம்.
இதுக்கு முன்னாடி, ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குறதால இந்தியாவுக்கு அமெரிக்கா 50% வரி விதிச்சதை சீனா விமர்சிச்சிருந்தது. இந்தியாவுக்கான சீன தூதர் Xu Feihong, “நம்மை சீண்டிப் பார்க்குறவங்களுக்கு ஒரு அங்குலம் இடம் கொடுத்தா, அவங்க ஒரு மைல் தூரம் போயிடுவாங்க”னு சொல்லியிருந்தாரு. இந்தப் பின்னணியில மோடியோட இந்தப் பயணம் இன்னும் முக்கியமா பார்க்கப்படுது.
இந்தியாவுக்கு இந்த மாநாடு மத்திய ஆசிய நாடுகளோட உறவை வலுப்படுத்தவும், பொருளாதார, பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தவும் ஒரு பெரிய வாய்ப்பு. மோடியோட பங்கேற்பு இந்தியாவோட உலகளாவிய செல்வாக்கை வெளிப்படுத்தும்.
இதையும் படிங்க: இந்தியாவை மட்டும் டார்கெட் செய்வது ஏன்? இன்னும் நிறையா பாக்கப்போறீங்க! ட்ரம்ப் வார்னிங்..