செங்குன்றம் அருகே மருத்துவமனையில் உயிரிழந்த பிரேமலதாவின் தாயாரின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. நாளை பிற்பகல் வடபழனியில் அடக்கம் செய்யப்படும் என தேமுதிக தலைமை கழகம் அறிவித்துள்ளது. இந்நிலையில் பிரேமலதா விஜயகாந்தின் தாயார் அம்சவேணி உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பொருளாளர் எல்.கே.சதீஷ் ஆகியோரின் தாய் அம்சவேணி (83) வயது மூப்பு காரணமாக உடல் நலிவுற்று செங்குன்றம் அடுத்த நல்லூரில் உள்ள வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் வயது மூப்பு மற்றும் சிகிச்சை பலனின்றி இன்று காலை அம்சவேணிகாலமானார். இதையடுத்து பிரேமலதா விஜயகாந்த்தின் தாய் அம்சவேணி உடல் விருகம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது மருத்துவமனையில் உயிரிழந்த பிரேமலதா விஜயகாந்த் தாய் அம்சவேணியின் உடலுக்கு அவரது உறவினர்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து வாகனத்தில் அம்சவேணியின் உடல் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. விருகம்பாக்கத்தில் அவர்களது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள அம்சவேணியின் உடல் நாளை வடபழனியில் உள்ள ஏவிஎம் மின் மயானத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளதாக தேமுதிக தலைமை கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கட்சி தொண்டன் இப்படித் தான் செருப்பு வீசுவானா? - ஆவேசமான பிரேமலதா விஜயகாந்த்...!
ஈரோடு மாவட்டத்தில் பூத் முகவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள பிரேமலதாவுக்கும், சுதீஷுக்கும் தாயாரின் மறைவு செய்தி தெரிவிக்கப்பட்டதும், அவர்கள் அந்த நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு, சென்னைக்கு திரும்பினர்.பிரேமலதா விஜயகாந்தின் தாயார் மறைவுக்கு இரங்கல் செய்தி வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தங்கம் தென்னரசு ஆகியோருடன் பிரேமலதா விஜயகாந்த் வீட்டிற்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு வைக்கப்பட்டிருந்த அம்சவேணி அம்மாளின் உடலுக்கு மாலை அணிவித்து இறுதி மரியாதை செலுத்தினார்.
இதையும் படிங்க: இதுவே கடைசியா இருக்கட்டும்... டென்ஷனின் உச்சிக்கே சென்ற பிரேமலதா... தேமுதிக நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை...!