தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஐரோப்பிய நாடுகளுக்கு முலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொள்கிறார். ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளில் ஸ்டாலின் முன்னிலையில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. முதலீடுகளை ஈர்க்கும் வகையில் 5வது முறையாக ஸ்டாலின் பயணம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெர்மன் மற்றும் இங்கிலாந்து நாட்டிற்கு பயணம் மேற்கொள்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடு பயணம் செய்கிறேன். செப்டம்பர் 8ம் தேதி தமிழ்நாடு திரும்புகிறேன். 2021ம் ஆண்டு திமுக பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை ரூ.10.62 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 929 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs) கையெழுத்தாகியுள்ளன என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இதன் மூலமாக 32 லட்சத்து 81 ஆயிரத்து 32 பேருக்கு வேலை வாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஒப்பந்தங்களில் பெரும்பாலானவை ஏற்கனவே முதலீடுகளாக மாறி, அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த வளர்ச்சிக்கு, மத்திய அரசின் புள்ளிவிவரங்களே சான்றாக இருப்பதாகவும் அவர் கூறினார். அமைதியான மாநிலமாக, திறமையான இளைஞர்கள் இருக்கக்கூடிய, வாய்ப்புகளை ஏற்படுத்தக்கூடிய மாநிலமாக தமிழ்நாடு இருப்பதை எனது ஒவ்வொரு வெளிநாட்டு பயணத்திலும் சுட்டிக்காட்டி முதலீடு செய்ய பன்னாட்டு நிறுவனங்களை வலியுறுத்தியுள்ளேன்.
இதையும் படிங்க: தொழில் முதலீடுகளை ஈர்க்க பயணம் - ஜெர்மனி, இங்கிலாந்து புறப்பட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்...!
ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான், ஸ்பெயின், சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட 5 வெளிநாடுகளுக்கு இதுவரை பயணம் மேற்கொண்டுள்ளேன். அமெரிக்காவில் 19 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஸ்பெயின் 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், ஜப்பான் 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் , ஐக்கிய அரபு அமீரகத்தில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், சிங்கப்பூரில் ஒரு ஒப்பந்தம் என 30 ஆயிரத்து 37 நபர்களுக்கு வேலை வாய்ப்பை உறுதிபடுத்தக்கூடிய 36 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: ரொம்ப பெருமை பீத்திக்காதீங்க ஸ்டாலின்.. பேட்ச்வொர்க் மாடல் அரசு என கிண்டலடித்த அண்ணாமலை..!!