முத்துராமலிங்கத் தேவரின் 118ஆவது ஜெயந்தி, அவரது 63வது குரு பூஜையாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் பங்கேற்க பசும்பொன் செல்லும்வழியில் மதுரையில் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தியுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 118வது ஜெயந்தி மற்றும் 63 ஆம் ஆண்டு குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரம் செல்லும் தமிழக அரசு சார்பில் மதுரை கோரிப்பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வெண்கல சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மூத்த அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன் பின்னர் சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த தேவரின் முழு உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் திமுக எம்.பி. கனிமொழி, அமைச்சர்கள் மூர்த்தி, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஷ், தங்கம் தென்னரசு, டி.ஆர்.பி.ராஜா, பெரியகருப்பன் ஆகியோர் பங்கேற்றனர். பின்னர் முதல்வர் ஸ்டாலின் இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்காக புறப்பட்டு சென்றார்.
இதற்காக மதுரை மாநகர பகுதிகளில் 3,000 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து மதுரை தெப்பக்குளத்தில் உள்ள மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் 224ஆவது குருபூஜையையோட்டி வெண்கல சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய உள்ளனர்.
இதையும் படிங்க: காலையிலேயே ஸ்பாட்டில் முதல்வர் ஸ்டாலின்..!! அடையாறு முகத்துவாரத்தில் மீண்டும் ஆய்வு: வேகமெடுக்கும் பணிகள்..!!
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கதேவர் 118வது ஜெயந்தி விழா, 62வது குருபூஜை விழா அக்.,28 முதல் கொண்டாடப்படுகிறது. இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தவுள்ளனர். இதற்காக ராமநாதபுரம் செல்லும் தலைவர்கள் அதற்கு முன்னதாக மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவரின் வெண்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கமானது.
இன்றைய தினம், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நயினார் நாகேந்திரன், ஒ.பி.எஸ். வைகோ, சீமான், டி.டி.வி, வி.கே.சசிகலா, ஜி.கே.மணி, விஜய பிரபாகரன், புஸ்லி ஆனந்த் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவரின் வெண்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய உள்ளனர்.
இதையும் படிங்க: "ஏட்டில் எழுதி நக்கினால் இனிக்காது"... கேரளாவை பார்த்து கத்துக்கோங்க ஸ்டாலின்... அன்புமணி ஆவேசம்...!