திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பழனியாண்டி இல்ல திருமண விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைத்தார். மணமக்கள் விஜயபாரதி - மனிஷாவை வாழ்த்தி பேசிய அவர், தமிழக அரசியல் சம்பந்தமாகவும் பேசினார்.
இந்நிகழ்ச்சியில்: திராவிட முன்னேற்ற கழகத்தை, கழகம் என்று மட்டும் சொல்வது கிடையாது. இயக்கம் என்று கூட அடிக்கடி சொல்வது உண்டு :இயக்கம் என்று சொன்னால் நமக்கு ஓய்வே இல்லை என்று பொருள்.
உடன்பிறப்பே வா என்ற தலைப்பின் கீழ் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியில் இருக்கக்கூடிய நிர்வாகிகளை எல்லாம் அழைத்து தனித்தனியாக தொகுதி வாரியாக நேர்காணல் நடத்திக் கொண்டிருக்கிறேன். ஆய்வு செய்து கொண்டிருக்கிறேன்.
இதையும் படிங்க: முதல்வருக்கு மறதி நோய்... SIR விவகாரத்தில் தலையிட்ட அண்ணாமலை...!
நாளை திமுக நடத்தக்கூடிய SIR-க்கு சாருக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டத்தை திமுகவினர் எப்படி நடத்த வேண்டும் கூட்டணி கட்சியினர்களோடு இணைந்து எப்படி செயல்பட வேண்டும் என்ற அறிவுறுத்தல்களையும் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு வழங்கியுள்ளேன் என்றார்.
திமுக களத்தில் பம்பரமாக சுழன்று வருகிறது. அதனால் எதிரிகளாக இருக்கக்கூடியவர்கள் புது புது உத்திகளோடு நம்மை தாக்குவதற்கு நம்மை அழிப்பதற்கு ஒழிப்பதற்கு புது புது முயற்சிகள் எல்லாம் எடுத்திருக்கிறார்கள்.
வருமான வரித்துறையை எழுப்பிவிட்டார்கள், அதற்கு பிறகு பல சிபிஐ என பல பல ஆயுதங்களை எல்லாம் எடுத்து திமுகவை மிரட்டி பார்த்தார்கள். இப்போது எஸ்ஐஆர் என்று சொல்லக்கூடிய ஒரு ஆயத்தை எடுத்து திராவிட முன்னேற்ற கழகத்தை அதன் மூலமாகத்தான் அழிக்க முடியும், ஒழிக்க முடியும் என்று முடிவு செய்திருக்கிறார்கள். வேறு மாநிலங்கள் வேணாமால் எடுபடலாமே தவிர உறுதியாக சொல்கிறேன் திராவிட முன்னேற்ற கழகத்தை பொறுத்தவரை தமிழ்நாட்டிலே ஒரு காலும் அது எடுபடாது என்பதை அழுத்த திருத்தமாக தெரிவித்துக்கொள்கிறேன்.
எஸ்ஐஆர் - ஐ எதிர்த்து நாம் நீதிமன்றத்திற்கு சென்றிருக்கிறோம். நாளை திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்க உள்ள அதே சமயத்தில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது. இதனுடைய நேற்று திடீரென திமுக தொடர்ந்து உள்ள வழக்கில் தங்களையும் இணைக்க கோரி அதிமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உண்மையாகவே அதிமுகவிற்கு எஸ்ஐஆர் - ஐ எதிர்க்க வேண்டும் என்றால் வெளிப்படையாக கருத்து தெரிவித்திருக்க வேண்டும், முன்கூட்டியே வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும்.பாஜகவும் தேர்தல் ஆணையமும் எதைக் கொண்டு வந்தாலும் ஏற்கக்கூடிய அதிமுக இன்று அவசர அவசரமாக திமுக தொடர்ந்திருக்கும் வழக்கில் இணைந்திருக்கிறார்கள் என்றால் ஏதோ ஒரு கபட நாடகத்தை அரங்கேற்ற திட்டமிட்டுள்ளனர் என மு.க .ஸ்டாலின் குற்றச்சாட்டு உள்ளார்.
இதையும் படிங்க: 2006-ல் கோட்டை விட்டதை 2026 - ல் பிடிக்க மாஸ்டர் பிளான் ... திமுகவுக்கு செக் வைக்கும் காங்கிரஸ்...!