‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ நிகழ்வில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 2-ஆம் கட்ட விரிவாக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னை, நேரு உள்விளையாட்டரங்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில், தமிழ்நாடு அரசு பெண்களுக்காக செயல்படுத்தும் பல்வேறு முன்னோடி திட்டங்களின் சாதனைகள், பயனடைந்த மகளிரின் அனுபவங்கள் மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் முக்கிய பெண் சாதனையாளர்களை ஒன்றிணைத்து, பெண்களின் முன்னேற்றத்திற்காக அரசு மேற்கொண்ட முன்னெடுப்புகளை எடுத்துக்காட்டும் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ தமிழ்நாட்டின் சாதனை பெண்களின் மாபெரும் வெற்றிக் கொண்டாட்ட விழா நடைபெற்றது.
இந்த விழாவில், 16 லட்சத்து 94 ஆயிரத்து 339 மகளிர் பயன்பெறும் வகையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 2-ஆம் கட்ட விரிவாக்கத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்து, 10 மகளிருக்கு உரிமைத் தொகைக்கான வங்கி பற்று அட்டைகளை (ATM Cards) வழங்கினார்.
இதையும் படிங்க: மதுரை: புதிய மேம்பாலத்திற்கு வீரமங்கை வேலுநாச்சியார் பெயர்..!! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “இது உதவித்தொகை அல்ல, உரிமை தொகை. மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட் உள்ளிட்ட 10 மாநிலங்களில் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்த உள்ளது” என்று கூறினார்.
இந்த ஆயிரம் ரூபாய் என்பது ஒரு தொடக்கம் மட்டும்தான், பத்த ஆண்டுகள் பாழ்படுத்தப்பட்ட தமிழ்நாட்டு வளர்ச்சியை மீட்டெடுத்து வரலாற்றிலே இல்லாத அளவுக்கு இந்தியாவில் எந்த மாநிலமும் சாதிக்காத அளவுக்கு பொருளாதாரம் வளர்ச்சி அடையும். 16 விழுக்காடு வளர்ச்சியை பெற்று இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. இந்த வளர்ச்சியில் மகளிருக்கான பங்கு நிச்சயம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் இதுவரைக்கும் 13 லட்சத்தி 75 ஆயிரத்து 492 சகோதரிகளுக்கு மாதம், மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் இதுவரைக்கும் 28 ஆயிரம் ரூபாய் வழங்கி இருக்கிறோம்.
எண்ணிக்கை அதிகரிப்பதற்காக மக்களுடன் ஸ்டாலின் முகாம்கள் மூலமாக விடுபட்ட மகளிரிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, இன்று காலை 16 லட்சத்து 94 ஆயிரத்து 339 பேரின் வங்கிக்கணக்குகளில் 1000 ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. இனிமே தமிழ்நாட்டில் இருக்கிற ஒரு கோடியே 30 லட்சத்து 69 ஆயிரத்து 831 சகோதரிகளுக்கு மாதம், மாதம் 1000 ரூபாய் தொடர்ந்து கிடைக்கும். தமிழ்நாட்டில் பெண்கள் உயர்ந்து நடைபோட நிச்சயம் உரிமை தொகையும் உயரும் பெண்களுடைய உரிமையும் உயரும் என உறுதியா சொல்றேன் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அம்பேத்கர் நினைவு நாள்: "புரட்டுகளைப் பொசுக்கிய புரட்சியாளர்"..!! முதல்வர் ஸ்டாலின் உருக்கமான பதிவு..!!