ரவுடி கொட்டு ராஜா இன்று என்கவுண்டரில் கொல்லப்பட்டார். என்கவுண்டர் சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மத்திய மண்டல காவல் ஐஜி பாலகிருஷ்ணன் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் சங்கரிடம் நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவல் உதவி ஆய்வாளரும் ஒரு பாதுகாப்பு படையினரும் ரௌடி வெள்ளைக்காலியை ஜனவரி 24ஆம் தேதி திண்டுக்கல்லில் இருந்து சென்னைக்கு அழைத்துச் சென்றதாகவும் அப்போது மதிய உணவிற்காக நின்றபோது வெள்ளை காளி மீது ஒரு கும்பல் நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தில் ஒரு காவல்துறை அதிகாரி காயமடைந்த நிலையில் குற்றவாளிகளை தேடுவதற்காக 5 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டன. குற்றவாளிகளின் சிலர் ஊட்டியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பெயரில் காவல்துறையினர் ஊட்டிக்குச் சென்று பலரை விசாரணைக்கு அழைத்து வந்ததாக தெரிவித்தார்.

அவர்களின் கொட்டு ராஜா என்பவர் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவர் மீது மூன்று கொலை வழக்குகள் மற்றும் கொலை முயற்சி, ஆயுத சட்டத்தின் கீழ் வழக்குகள் என ஐந்துக்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாக கூறினார். கொட்டு ராஜாவிடம் விசாரணை நடத்தப்பட்ட பிறகு அவர் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை மீட்பதற்காக காவல்துறையினர் மங்களமேடு சுங்கச்சாவடிக்கு அவரை அழைத்துச் சென்றுள்ளதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: கல்லூரி வளாகத்தில் பாலியல் மருந்துகள்..! சிதறி கிடக்கும் மது பாட்டில்கள்..! போலீஸ் தீவிர விசாரணை..!
ஆயுதங்களை மீட்கும் பணியின் போது கொட்டுராஜா காவல்துறையினர் மீது நாட்டு வெடிகுண்டு வீசியதாகவும் இதனால் காவல் வாகனத்தின் மீது பட்டு சேதம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். இந்த தாக்குதலில் உதவி ஆய்வாளர் சங்கர் என்பவரை கொட்டுராஜா ஆயுதத்தால் தாக்கி அவரது கையை காயத்தை ஏற்படுத்தியதாகவும் தற்காப்புக்காக மங்கல மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் கொட்டு ராஜாவை சுட்டதாகவும் கூறினார்.
கொட்டு ராஜாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவிக்கதாகவும் முதல் தகவல் அறிக்கை நீதித்துறை நடுவர் அறிவுரையின் பேரில் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: பாலியல் குற்றச்சாட்டால் உயிரை மாய்த்துக்கொண்ட நபர்... ரீல்ஸ் பெண் தலைமறைவு.. தேடுதல் வேட்டை தீவிரம்..!