நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க அனைத்து மாநில முதல்வர்களுக்கும் மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்த நிலையில் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் டெல்லிக்கு பயணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய கல்வி நிதி இன்னும் வழங்கப்படாமல் இருந்து வருகிறது. மொழிக் கொள்கை விவகாரத்தின் காரணமாக கல்வி நிதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் மெட்ரோ உள்ளிட்ட பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த விவகாரங்கள் குறித்தும் இதற்கான நிதி வழங்கவும் நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: மற்ற மாநில முதல்வர்களுடன் ஆலோசனை! ஜனாதிபதி விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை..!

புதிய கட்டடங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் பாலங்கள் உள்ளிட்டவை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக மத்திய அரசிடம் இருந்து நிதி பெற வலியுறுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஊழல் துணைவேந்தருக்கு பிரிவு உபசார விழாவா? ஆளுநரால் தமிழ்நாட்டுக்கே தலைகுனிவு... கிழித்து தொங்கவிட்ட அமைச்சர்!