5 நாள் பயணமாக உதகை சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். நேற்று 127வது மலர் கண்காட்சியை திறந்து வைத்தார். இந்த நிலையில் இன்று காலை ஆ.ராஜாவுடன் இணைந்து நடைபயணம் சென்றார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உதகையில் 5 நாள் பயணம் மிக எழுச்சியாக இருந்தது எனவும் மக்களை சந்திக்கும் வாய்ப்பு தனக்கு கிடைத்ததாகவும் தெரிவித்தார். திராவிட மாடல் அரசு மீது மக்கள் காட்டும் ஆதரவை பார்க்கும்போது மிக மகிழ்ச்சியாக உள்ளது என கூறிய அவர், மலர்கண்காட்சி எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருந்தது என்றார்.
இதையும் படிங்க: ஊழல் துணைவேந்தருக்கு பிரிவு உபசார விழாவா? ஆளுநரால் தமிழ்நாட்டுக்கே தலைகுனிவு... கிழித்து தொங்கவிட்ட அமைச்சர்!

உச்சநீதிமன்றத்தில் ஜனாதிபதி கருத்து கேட்ட விவகாரம் தொடர்பாக பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், மற்ற மாநில முதலமைச்சர்களுடன் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். மேலும் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிதான் நீடிக்கும் என்றும் 2026 மட்டுமல்ல 2031, 2036 என எல்லா காலத்திலும் தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி தான் நீடித்து இருக்கும் என்றார்.
இதையும் படிங்க: அவரு எடுபுடி கோழைச்சாமி.. கோடநாடுன்னு சொன்னாலே தொடை நடுங்குதே! பந்தாடிய அமைச்சர்..!