ஜம்மு காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத், லாகூர், கராச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்திய ராணுவம் பதிலடி தாக்குதல் நடத்தியது..

இந்த நிலையில் இந்திய ராணுவத்திற்கு ஆதரவாகவும் பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிராகவும் இன்று பேரணி நடைபெறும் என முதலமைச்சர் மு. க ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு சென்னையில் உள்ள காவல்துறை இயக்குநர் அலுவலகத்தில் இருந்து பேரணி தொடங்கி நடைபெற்றது.
இதையும் படிங்க: எங்களை குறைகூற அருகதை இல்லை... எடப்பாடியை விளாசி தள்ளிய ஆர்.எஸ்.பாரதி!!

இந்த பேரணி தீவுத்திடலில் உள்ள போர் நினைவுச்சின்னம் அருகே வரை சென்று நிறைவு பெற்றது. இந்தப் பேரணியில் முன்னாள் படைவீரர்கள், அமைச்சர்கள், எம்பிக்கள், பொது மக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு கையில் தேசியக் கொடியை ஏந்தியபடி பங்கேற்றனர். பேரணி செல்லும் சாலையில் மருத்துவ முகாம்கள், ஆம்புலன்ஸ்கள், குடிநீர் தொட்டிகள் என பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இதையும் படிங்க: 2026 சட்டமன்றத் தேர்தலில் இதுதான் நடக்கும்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆரூடம்!!