தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள சி. ஜோசப் விஜய், பதவியேற்ற சில நாட்களிலேயே மாநிலத்தின் முக்கிய பிரச்சினைகளில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார். குறிப்பாக, காவிரி டெல்டா விவசாயிகளின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப செயல்படும் வகையில், வேளாண்மைத் துறை மற்றும் நீர்வளத் துறை அதிகாரிகளுடன் உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தை நடத்தி வருகிறார்.
இந்த ஆலோசனையில் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான சிக்கல்கள், மேட்டூர் அணை திறப்பு மற்றும் வரவிருக்கும் காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டம் ஆகியவை முக்கிய இடம் பெற்றுள்ளன. காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி சீசன் தொடங்க உள்ள நிலையில், மேட்டூர் அணையை ஜூன் 12-ம் தேதி வழக்கம்போல் திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த ஆண்டு அணையில் நீர் இருப்பு போதுமான அளவில் இல்லாத சூழலில், கர்நாடகாவிலிருந்து உரிய நீர் வெளியீட்டை உறுதி செய்ய அரசு தீவிர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு காவிரி பாசன விவசாயிகள் நலச் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளன. முதலமைச்சர் விஜய் இந்த கோரிக்கைகளை அதிகாரிகளிடம் விவாதித்து, தேவையான தயாரிப்புகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதையும் படிங்க: அம்மா ஆத்மாதான் இபிஎஸ்-க்கு தண்டனை கொடுத்துள்ளது! அமைச்சர் செங்கோட்டையன் கோவை விமான நிலையத்தில் பேட்டி!
மேட்டூர் அணை திறப்பு என்பது டெல்டா விவசாயிகளுக்கு மிக முக்கியமானது. ஜூன் 12-ம் தேதி அணை திறக்கப்பட்டால், குறுவை பயிருக்கு தேவையான நீர் கிடைக்கும். இதற்காக அணைப் பகுதியில் தூர் வாரல் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு, கால்வாய்கள் தயார் நிலையில் உள்ளனவா என்பதை அதிகாரிகள் சரிபார்த்து வருகின்றனர். முதலமைச்சர் இந்த விவகாரத்தில் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தி, அதிகாரிகளிடம் தகவல்களைப் பெற்று வருகிறார்.இதனிடையே, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 51-வது கூட்டம் மே 28-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
இதையும் படிங்க: தமிழக அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..!! அகவிலைப்படி 60%-ஆக உயர்வு..!! முதல்வர் விஜய் அறிவிப்பு..!!