80வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, முதலமைச்சராக முதல் முறை கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றிய விஜய், மக்களுக்கு சுதந்திர தின உரையாற்றினார். அப்போது சுதந்திரத்திற்காக நமக்காக போராடிய தியாகிகளை நினைவு கூர்ந்து பேசிய விஜய், தங்களுடைய உயிர், உடமை, வாழ்க்கை எல்லாவற்றையும் இழந்து நமக்காக சுதந்திரம் வாங்கிக் கொடுத்த நம் சுதந்திரப் போராட்டத் தியாகிகள், அதில் பிரபலமானவர்கள் மற்றும் பேர் தெரியாதவர்கள் என இருந்தாலும், அவர்கள் எல்லோருக்கும், ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் என்னுடைய வீர வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
தொடர்ந்து பேசியவர் சுதந்திர போராட்ட வீரர்கள், ராணுவ வீரர்கள் குடும்பத்தினருக்கு அசத்தலான 5 அறிவிப்புகளை வெளியிட்டார். தாய்நாட்டிற்காக தன்னலமற்ற தியாகம் செய்து, நமது நாட்டின் பாதுகாப்பிற்காக அரும்பாடுபட்ட முன்னாள் படைவீரர்களின் நலன் கருதி, அவர்களது இரண்டு மகள்களுக்கும் வழங்கப்படும் திருமண நிதி உதவி ரூ.25 ஆயிரத்திலிருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
இரண்டு, மாற்றுத்திறன் கொண்ட முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மாதாந்திர நிதி உதவி ரூ.5,000-லிருந்து ரூ.7,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
இதையும் படிங்க: முதல்வர் விஜயின் முதல் சுதந்திர தின விழா..! முதல் வரிசையில் த்ரிஷா..! வைரலாகும் காட்சிகள்..!!
மூன்று, மாநில அரசால் விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.23,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
நான்கு, மாநில அரசால் விடுதலைப் போராட்டத் தியாகிகளின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர குடும்ப ஓய்வூதியம் ரூ.12,500 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
ஐந்து, வீரபாண்டிய கட்டபொம்மன், முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி, மருது சகோதரர்கள் மற்றும் வ.உ.சிதம்பரனார் ஆகியோரின் வழித்தோன்றல்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர சிறப்பு ஓய்வூதியம் ரூ.11,500 ஆக உயர்த்தி வழங்கப்படும் இவற்றிற்கான அரசாணைகள் அரசால் வெளியிடப்பட்டுள்ளது என்றார்.
இதையும் படிங்க: மத்திய அரசுடன் ஒத்துழைப்பு ஆனால்... சுதந்திர தின உரையில் ‘க்’வைத்து எச்சரித்த சி.எம். விஜய்...!