தென்மண்டல மாநில முதலமைச்சர்களின் மாநாடு தற்போது சென்னைக்கு அருகே கோவளத்தில் நடைபெற்று வருகிறது. தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் விஜய் இந்த மாநாட்டில் அழுத்தம் திருத்தமாகப் பேசியிருக்கிறார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் இந்த மாநாடு நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு முதலமைச்சர்களும் தங்களது மாநில கோரிக்கைகளை முன்வைத்துள்ள நிலையில், முதலமைச்சர் விஜய் பேசிய என்னவென்ற தகவல் வெளியாகியுள்ளது. கிராமப்புற மாணவர்களுக்கு எதிரான நீட் தேர்வு முறையை கைவிட வேண்டும் என்பதை தமிழக முதலமைச்சர் விஜய் வலியுறுத்தியிருக்கிறார். ஏற்கனவே நடைமுறையில் இருந்த முறையின் அடிப்படையில், அதாவது 12ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையிலேயே, நீட் தேர்வு இல்லாமல் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் தமிழக முதலமைச்சரின் கருத்து அமைந்திருக்கிறது.
நீட் தேர்வு கிராமப்புற மாணவர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை தமிழக முதலமைச்சர் சுட்டிக்காட்டியிருக்கிறார். அந்த வகையில், நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும், 12ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார்.
இதையும் படிங்க: “திட்டமிட்டப்படி வரும் 24ம் தேதி போராட்டம்...” - எதிர்பாராத இடத்தில் இருந்து சி.எம். விஜய்க்கு வந்த வார்னிங்...!
அதே நேரத்தில், மருத்துவப் படிப்பைத் தொடர்ந்து மற்ற மருத்துவப் படிப்புகளுக்கும் நீட் போன்ற நுழைவுத் தேர்வு இருக்கக் கூடாது என்பதையும் தமிழக முதலமைச்சர் வலியுறுத்தியிருக்கிறார். அந்த வகையில், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழக முதலமைச்சர் பேசியிருக்கிறார்.
போதைப்பொருளைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தொடங்கியிருக்கிறது. அருகில் இருக்கக்கூடிய எல்லையோர மாநிலங்கள் வாயிலாக போதைப்பொருட்கள் தமிழகத்திற்குள் வராத வகையில், கூட்டு முயற்சியின் அடிப்படையில் போதைப்பொருள் கடத்தலை முற்றிலுமாகத் தடுப்பதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கியிருக்கிறோம்.
அருகில் இருக்கக்கூடிய மாவட்டங்களும் மாநிலங்களும் அதற்கான ஒத்துழைப்பை வழங்கும் பட்சத்தில், முழுமையாக தமிழகத்தில் போதைப்பொருளை ஒழிப்பதற்கான தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்ற உறுதியையும் தமிழக முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், பொருளாதார வளர்ச்சி, சமூகப் பொருளாதாரம் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், மாநில அரசு எடுக்கக்கூடிய பல்வேறு நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதையும் தமிழக முதலமைச்சர் வலியுறுத்தியிருக்கிறார்.
நிதி என்ற அடிப்படையில், மத்திய அரசின் மூலமாக மாநில அரசுக்கு கிடைக்க வேண்டிய நிதியை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மாநிலங்களுக்கு இடையேயான நீர்வளங்கள் என்ற அடிப்படையில், நதிகளை இணைப்பதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றும், அதற்கான தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கும் அருகில் இருக்கக்கூடிய மாநிலங்களுக்கும் இடையே நிலவும் நீர்ப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், 152 அடி என்ற அடிப்படையில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையும் தமிழக முதலமைச்சர் விஜய் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
அந்த வகையில், நீட், நதிநீர் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக தமிழக முதலமைச்சர் விஜயின் உரை அமைந்திருக்கிறது.
மத்திய அரசின் ஒத்துழைப்பு அவசியம் என்றும், அதே நேரத்தில் மாநில அரசின் அடிப்படையில் மற்ற மாநிலங்களின் ஒத்துழைப்பும் அவசியம் என்றும் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் உரிமைகளை விட்டுக்கொடுப்பதற்கான எந்தவிதமான சமரசப் பேச்சுக்கும் இடமில்லை என்பதையும் சுட்டிக்காட்டி, பல்வேறு கோரிக்கைகளை இந்தக் கூட்டத்தின் வாயிலாக தமிழக முதலமைச்சர் வலியுறுத்தியிருக்கிறார்.
தென்மண்டல முதலமைச்சர்கள் மாநாட்டில் முதலமைச்சர் விஜய் வலியுறுத்திய முக்கிய அம்சங்களை நாம் பார்த்தோம். குறிப்பாக, தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பதை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் முதலமைச்சர் விஜய் அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் பிரதிநிதித்துவம் குறையாது என்பதற்கான உத்தரவாதம் வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
அதேபோல், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையும் மிக முக்கியமான கோரிக்கையாக முன்வைத்திருக்கிறார்.
சென்னைக்கு அருகே கோவளம் பகுதியில் நடைபெற்று வரும் இந்த முதலமைச்சர்கள் மாநாட்டில், ஒவ்வொரு மாநில முதலமைச்சரும் தங்களுடைய முக்கிய கோரிக்கைகளையும் வலியுறுத்தல்களையும் முன்வைத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: கடன் வாங்கிக் காரா?... இந்த ஊதாரித்தனம் தேவையா? - சி.எம்.விஜய் அறிவிப்பால் எரிமலையாய் வெடித்த சீமான்...!