வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2026 இன்று நடைபெறுவதை சுட்டிக்காட்டி தமிழக வெற்றி கழகம் பெருமிதம் தெரிவித்துள்ளது. நூறு நாட்களில் நிகழ்ந்துள்ள பொருளாதார சாதனை எனவும் தெரிவித்துள்ளது. முதல்வராக விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி பொறுப்பேற்ற 100 நாட்களில், ரூ.1,02,514 கோடி முதலீடுகளுக்கான 104 புரிந்துணர்வு ஒப்பந்தங்களைக் கொண்டு வந்து வரலாற்றுச் சாதனை என தெரிவித்துள்ளது.
1,21,788 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கம் செய்யப்படுகிறது எனக் கூறப்பட்டிருக்கிறது. இது வெறும் முதலீட்டாளர்கள் மாநாடு அல்ல. இது தமிழ்நாட்டின் அடுத்த வளர்ச்சிப் பாதைக்கான தொடக்கம் என கூறியுள்ளது.

கையாலாகாத, திறனற்ற திமுக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறோம், தொழில் முதலீடுகளை ஈர்க்கிறோம் என்று கூறிக்கொண்டு, தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிப்பதுபோல் நடித்து, வெற்று விளம்பரம் செய்துகொண்டு தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருந்ததாக தமிழக வெற்றி கழகம் கூறியுள்ளது.
இதையும் படிங்க: டெல்லி வரை சென்ற குதிரை பேர விவகாரம்! அமித் ஷாவிடம் பழனிசாமி வைத்த பரபரப்பு குற்றச்சாட்டு
ஆனால், தவெக ஆட்சிப் பொறுப்பேற்று 100 நாட்கள்கூட முடியாத நிலையில், இன்று மட்டும் ரூ.67,452 கோடி முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகிறது எனும் தவெக ஆட்சியில், 100 நாட்களில் எழுதப்படும் புதிய பொருளாதார அத்தியாயம் இது எனவும் பெருமிதம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதான் முதல்வர் விஜய் மக்கள் நலன் சார்ந்த ஆட்சிக்கும், கையாலாகாத, திறனற்ற திமுகவிற்கும் உள்ள வித்தியாசம் என்று கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 6 ஐ.பி.எஸ் அதிகாரிகள் உட்பட 10 காவல் அதிகாரிகள் இடமாற்றம்! தமிழக அரசு அதிரடி உத்தரவு!