• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, August 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தேசிய கைத்தறி நாள்... முதலமைச்சர் விஜய் வாழ்த்து... இன்று நெசவாளர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்...!

    சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கத்தில் இன்று பிற்பகல் 4 மணிக்கு வெற்றித்தறி விற்பனை நிலையத்தை தொடங்கி வைக்கிறார். 
    Author By Amaravathi Fri, 07 Aug 2026 07:43:02 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    CM vijay-wishes to-national-handloom-day

    இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்படுகிறது. 905ஆம் ஆண்டு இதே நாளில் தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தை நினைவுகூரும் வகையிலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பங்காற்றும் கைத்தறி நெசவாளர்களின் சமூகத்தைக் கௌரவிக்கவும், அவர்களின் உழைப்பைப் போற்றவும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.

    பாரம்பரிய கைத்தறி கலையைக் காப்பாற்றும் நெசவாளர்களின் உழைப்பையும் அவர்களின் பங்களிப்பையும் பெருமைப்படுத்துவது. கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பை வழங்கும் கைத்தறித் துறையின் முக்கியத்துவத்தை நாட்டுக்கு உணர்த்துவது.: இந்தியாவின் தொன்மையான மற்றும் மதிப்புமிக்க கைத்தறி மரபுகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்பது போன்றவையே இந்த நாளின் நோக்கமாகும். 

    2015-ஆம் ஆண்டில் இந்திய அரசால் இந்த நாள் அங்கீகரிக்கப்பட்டது. அதே ஆண்டில், முதல் தேசிய கைத்தறி தினம் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிலையில், தேசிய கைத்தறி நாளை ஒட்டி தமிழ்நாட்டின் கைத்தறி நெசவாளர்கள், கைத்தறி இணைத் தொழிலாளர்களுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் இன்று முதலமைச்சர் விஜய் வெற்றித்தறி விற்பனை நிலையம், மின் வணிகத்தளத்தை தொடங்கி வைக்கிறார். சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கத்தில் இன்று பிற்பகல் 4 மணிக்கு வெற்றித்தறி விற்பனை நிலையத்தை தொடங்கி வைக்கிறார். 

    இதையும் படிங்க: சி.எம்.விஜய் இதை அனுமதிக்கக்கூடாது... மீறினால்... தமிழக அரசுக்கு பி.ஆர்.பாண்டியன் எச்சரிக்கை...!

    மின் வணிகத்தளத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய் கைத்தறி பொருட்களின் கண்காட்சியையும் பார்வையிட உள்ளார். மாநில அளவில் சிறந்த நெசவாளர்கள் மற்றும் வடிவமைப்பாளர்களுக்கான விருதுகளை முதலமைச்சர் விஜய் வழங்கி கவுரவிக்க உள்ளார்.

    முதலமைச்சர் விஜய் தனது வாழ்த்து செய்தி மூலம் நெசவாளர்களுக்கு தெரிவித்துள்ளதாவது:  1905-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7-ஆம் நாளன்று தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தின் நினைவாக, கைத்தறித் தொழிலை மேம்படுத்தி, கைத்தறி நெசவாளர்களின் வருவாயை அதிகரிக்கவும், நெசவாளர்களுக்கென உயரிய கௌரவத்தை ஏற்படுத்தவும், தமிழ்நாட்டின் பாரம்பரியத்தையும், பண்பாட்டுச் சிறப்பையும் உலகறியச் செய்யும் கைத்தறித் தொழிலின் பெருமையைப் போற்றும் வகையிலும், ஆண்டுதோறும் ஆகஸ்ட் 7-ஆம் நாள் தேசிய கைத்தறி நாளாகக் கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் கைத்தறி நெசவாளர்களைப் போற்றும் வகையில், 7.08.2026 அன்று 12-வது தேசிய கைத்தறி நாள் கொண்டாடப்படுகிறது.

    தமிழ்நாட்டின் கைத்தறி தலைமுறையாகப் பேணிக்காத்துவரும் நெசவுக்கலை, நமது மாநிலத்தின் வளமான பாரம்பரியத்திற்கும், பண்பாட்டிற்கும் சிறப்பு சேர்க்கிறது. பட்டு மற்றும் பருத்தி இழைகளால் உருவாக்கப்படும் தமிழ்நாட்டின் புகழ்பெற்ற கைத்தறி இரகங்கள், நமது நெசவாளர்களின் திறமைக்கும், கைவினை நுட்பத்திற்கும் சிறந்த எடுத்துக்காட்டுகளாக விளங்குகின்றன. இத்தொழில் மூலம் மகளிர் அதிக எண்ணிக்கையில் வேலைவாய்ப்பைப் பெறுவதால், மகளிர் வாழ்வாதார முன்னேற்றத்திற்கு கைத்தறித் துறை பெரும்பங்கு வகிக்கிறது. மேலும், தமிழ்நாடு அரசு, கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்களின் சமூகப் பாதுகாப்பை உறுதிசெய்யவும், கைத்தறி உற்பத்தி மற்றும் விற்பனையை ஊக்குவிக்கவும் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. நெசவாளர்களின் உழைப்பிற்குரிய அங்கீகாரமும், அவர்களின் உற்பத்திப் பொருட்களுக்கு நிலையான சந்தை வாய்ப்பும் கிடைப்பதற்கு அரசு தொடர்ந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விலையில்லா மின்சாரம், தள்ளுபடி மானியம், தொடர் வேலைவாய்ப்புத் திட்டம், தமிழ்நாடு கூட்டுறவு கைத்தறி நெசவாளர் சேமிப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டம், முதியோர் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், வீட்டுவசதி திட்டம், கைத்தறி ஆதரவுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நெசவாளர் நலத்திட்டங்கள் நலத்திட்டங்கள் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    மேலும், தமிழ்நாடு நெசவாளர்களின் தயாரிப்புகளை சர்வதேச அளவில் நேரடியாக விற்பனை செய்வதற்காக கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் மூலம் அமைக்கப்பட்டுள்ள "வெற்றித் தறி" விற்பனை நிலையங்களை இத்தேசிய கைத்தறி நாளில் தொடங்கி வைக்கிறேன். இவற்றை நாட்டின் முக்கிய நகரங்களில் விரிவுபடுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டமானது, தமிழக நெசவாளர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்திட பிரீமியம் தர நிலை, சிறந்த கைவினைத் திறன் மற்றும் நவீன வண்ணங்களுடன் நேர்த்தியாக ஆடை நெய்து, இளம் தலைமுறையினரைக் கவரக்கூடிய வகையில் நவீன காட்சிப்படுத்துதல் வழியே சிறந்த விற்பனை அனுபவத்தை வழங்கிடும்.

    இளம் தொழில்முனைவோரை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் இந்த அரசு, கைத்தறித் தொழிலில் ஈடுபட்டுவரும் இளம்தலைமுறை நெசவாளர்களுக்கு உறுதுணையாக இருக்கும் என உறுதி அளிக்கிறேன். "கைத்தறி நெசவாளர்களின் உழைப்பை மதிப்போம்; கைத்தறிப் பொருட்களை வாங்கி ஆதரிப்போம்" என்ற உணர்வுடன், தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் கைத்தறிப் பொருட்களைப் பயன்படுத்தி நமது பாரம்பரிய நெசவுக் கலையைப் பாதுகாத்து, அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச்செல்ல வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். இந்த இனிய நாளில், தமிழ்நாட்டின் கைத்தறி நெசவாளர்கள், கைத்தறி இணைத் தொழிலாளர்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    கைத்தறித் நெசவாளர்களின் தொழில் மேலும் வாழ்வில் வளமும் வளர்ச்சியடைந்து, நமது மகிழ்ச்சியும் பெருகிடவும், தமிழ்நாட்டின் பாரம்பரிய கைத்தறி இரகங்கள் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் மேலும் புகழ்பெறவும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இதையும் படிங்க: "கோட் சூட் விவசாயி முதல்வரே"..! கத்தி பட டயலாக்கோடு வானதி சீனிவாசன் தாக்கு..!

    மேலும் படிங்க
    நள்ளிரவில் நடந்த பயங்கரம்... 30 அடி உயர சுவர் இடிந்து விழுந்தது... இடிபாடுகளில் சிக்கியோர் நிலை என்ன?

    நள்ளிரவில் நடந்த பயங்கரம்... 30 அடி உயர சுவர் இடிந்து விழுந்தது... இடிபாடுகளில் சிக்கியோர் நிலை என்ன?

    இந்தியா
    இன்று மாஸ்டர் பிளானுடன் களமிறங்கும் சி.எம். விஜய்... சட்டப்பேரவையில் சம்பவம் உறுதி...!

    இன்று மாஸ்டர் பிளானுடன் களமிறங்கும் சி.எம். விஜய்... சட்டப்பேரவையில் சம்பவம் உறுதி...!

    அரசியல்
    இன்றைய ராசிபலன் (07-08-2026)..!! மீன ராசிக்காரர்களுக்கு இன்று ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும்..!!

    இன்றைய ராசிபலன் (07-08-2026)..!! மீன ராசிக்காரர்களுக்கு இன்று ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும்..!!

    ஜோதிடம்
    இந்திய பாதுகாப்பு துறையில் புதிய மைல்கல்.... அக்னி-4 ஏவுகணை சோதனை வெற்றி!

    இந்திய பாதுகாப்பு துறையில் புதிய மைல்கல்.... அக்னி-4 ஏவுகணை சோதனை வெற்றி!

    இந்தியா
    ஒட்டு மொத்த ஊழல் வழக்குகள் எத்தனை?... தமிழக அரசை சரமாரியாக கேள்விகளால் துளைத்தெடுத்த நீதிபதி...!

    ஒட்டு மொத்த ஊழல் வழக்குகள் எத்தனை?... தமிழக அரசை சரமாரியாக கேள்விகளால் துளைத்தெடுத்த நீதிபதி...!

    தமிழ்நாடு
    தமிழக மீனவர்கள் கைது! மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் விஜய் அவசர கடிதம்!

    தமிழக மீனவர்கள் கைது! மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் விஜய் அவசர கடிதம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    நள்ளிரவில் நடந்த பயங்கரம்... 30 அடி உயர சுவர் இடிந்து விழுந்தது... இடிபாடுகளில் சிக்கியோர் நிலை என்ன?

    நள்ளிரவில் நடந்த பயங்கரம்... 30 அடி உயர சுவர் இடிந்து விழுந்தது... இடிபாடுகளில் சிக்கியோர் நிலை என்ன?

    இந்தியா
    இன்று மாஸ்டர் பிளானுடன் களமிறங்கும் சி.எம். விஜய்... சட்டப்பேரவையில் சம்பவம் உறுதி...!

    இன்று மாஸ்டர் பிளானுடன் களமிறங்கும் சி.எம். விஜய்... சட்டப்பேரவையில் சம்பவம் உறுதி...!

    அரசியல்
    இந்திய பாதுகாப்பு துறையில் புதிய மைல்கல்.... அக்னி-4 ஏவுகணை சோதனை வெற்றி!

    இந்திய பாதுகாப்பு துறையில் புதிய மைல்கல்.... அக்னி-4 ஏவுகணை சோதனை வெற்றி!

    இந்தியா
    ஒட்டு மொத்த ஊழல் வழக்குகள் எத்தனை?... தமிழக அரசை சரமாரியாக கேள்விகளால் துளைத்தெடுத்த நீதிபதி...!

    ஒட்டு மொத்த ஊழல் வழக்குகள் எத்தனை?... தமிழக அரசை சரமாரியாக கேள்விகளால் துளைத்தெடுத்த நீதிபதி...!

    தமிழ்நாடு
    தமிழக மீனவர்கள் கைது! மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் விஜய் அவசர கடிதம்!

    தமிழக மீனவர்கள் கைது! மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் விஜய் அவசர கடிதம்!

    தமிழ்நாடு
    சி.எம்.விஜய் இதை அனுமதிக்கக்கூடாது... மீறினால்... தமிழக அரசுக்கு பி.ஆர்.பாண்டியன் எச்சரிக்கை...!

    சி.எம்.விஜய் இதை அனுமதிக்கக்கூடாது... மீறினால்... தமிழக அரசுக்கு பி.ஆர்.பாண்டியன் எச்சரிக்கை...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share