• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    யானை வழித்தடத்தை ஆக்கிரமித்த ரிசார்ட்டுகள்? செக் வைத்த கோர்ட்! 8 மூடல்! மீதமுள்ள 17க்கும் சிக்கல்?

    ஹாகா பகுதிகளில் கட்டுமான அனுமதி வழங்குவதில் விதிமீறல் இருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Author By Pandian Sat, 29 Aug 2026 12:43:40 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Coimbatore-Annaikatti-Elephant-Corridor-Resorts-Court-Order

    கோவை ஆனைகட்டி மலைப்பகுதியில் யானை வலசை பாதை மற்றும் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த வனப்பகுதியில் செயல்பட்டு வரும் ரிசார்ட்டுகள் தொடர்பான விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, ஆய்வு செய்யப்பட்ட 10 ரிசார்ட்டுகளில் 8 ரிசார்ட்டுகளை உடனடியாக மூட உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், மேலும் 17 ரிசார்ட்டுகள் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

    ஆனைகட்டி பகுதியில் பாதுகாக்கப்பட்ட அடர்ந்த வனத்தை ஒட்டிய பகுதிகளில் உரிய அனுமதிகள் இல்லாமல் ரிசார்ட்டுகள் செயல்படுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் நீண்ட காலமாக புகார் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, மலையிடப் பாதுகாப்புக் குழுமம் எனப்படும் ஹாகா கட்டுப்பாட்டுக்குள் வரும் பகுதிகளில் விதிமீறல்கள் இருப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

    வனப்பகுதியில் ரிசார்ட்டுகள் மற்றும் கட்டுமானங்கள் அதிகரிப்பதால் யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் இயல்பான நடமாட்டம் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. ரிசார்ட்டுகளில் இருந்து வெளியாகும் செயற்கை ஒளி, வாகனங்களின் சத்தம், கழிவுநீர் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் வனச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அபாயமும் இருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

    இதையும் படிங்க: சைபர் மோசடிக்கு தமிழகம் ‘ஹாட்ஸ்பாட்’! 88,385 புகார்கள்! குற்றங்களில் 7வது இடம்! பண இழப்பில் 4வது இடம்! அதிர்ச்சி தகவல்!

    இந்த விவகாரம் தொடர்பாக சுற்றுச்சூழல் ஆர்வலர் முரளிதரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மாநிலம் முழுவதும் யானை வலசை பாதைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் வழக்கில் வலியுறுத்தப்பட்டது.

    Anaikatti

    இதையடுத்து வனத்துறை சார்பில் அமைக்கப்பட்ட குழுக்கள் ஆய்வு மேற்கொண்டு, பாலக்காடு கணவாய்க்கு வடக்கே 22 மற்றும் தெற்கே 16 என மொத்தம் 38 யானை வழித்தடங்கள் இருப்பதாக தெரிவித்திருந்தன.

    ஆனைகட்டி பகுதியில் ரிசார்ட்டுகள் தொடர்பாக நீதிமன்றம் நியமித்த குழுவும் ஆய்வு மேற்கொண்டது. அதில் 10 ரிசார்ட்டுகள் இருப்பதாகவும், அவற்றில் இரண்டு மட்டுமே அனுமதி பெற்றுள்ளதாகவும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து 8 ரிசார்ட்டுகளை உடனடியாக மூட நீதிமன்றம் உத்தரவிட்டது. சமீபத்தில் அனுமதி பெற்றதாக கூறப்படும் இரண்டு ரிசார்ட்டுகளின் ஆவணங்களையும் முழுமையாக சரிபார்க்க அறிவுறுத்தப்பட்டது.

    இதற்கிடையே, ஆனைகட்டி பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ள மேலும் 17 ரிசார்ட்டுகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஹாகா பகுதிகளில் கட்டுமான அனுமதி வழங்குவதில் விதிமீறல் இருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கோவை மாவட்டத்தில் மனிதர்கள்–யானைகள் இடையிலான மோதல்கள் அதிகரித்து வரும் நிலையில், யானைகளின் இயற்கையான வலசை பாதைகளை பாதுகாப்பது முக்கியமானதாகியுள்ளது. நீதிமன்ற உத்தரவுகளுக்குப் பிறகு, ஆனைகட்டி பகுதியில் மேலும் எத்தனை கட்டுமானங்கள் மற்றும் ரிசார்ட்டுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தற்போது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: ஓணம் பண்டிகை எதிரொலி: கேரளா செல்லும் ரயில்களில் அலைமோதும் கூட்டம்! சிறப்பு ரயில்களும் ‘ஹவுஸ்புல்’

    மேலும் படிங்க
    நேபாளத்தில் தொடங்கிய வெள்ளம்… 200 கி.மீ. தூரம் அடித்துச் செல்லப்பட்ட சடலங்கள்! இந்தியாவில் 7 உடல்கள் மீட்பு!

    நேபாளத்தில் தொடங்கிய வெள்ளம்… 200 கி.மீ. தூரம் அடித்துச் செல்லப்பட்ட சடலங்கள்! இந்தியாவில் 7 உடல்கள் மீட்பு!

    இந்தியா
    8 சிம் கார்டுகள்! ஐ.எஸ்.ஐ. உளவு வேலை? பாகிஸ்தானுக்கு தகவல் கசியவிட்ட இளம் தம்பதியை தூக்கிய டெல்லி போலீஸ்!

    8 சிம் கார்டுகள்! ஐ.எஸ்.ஐ. உளவு வேலை? பாகிஸ்தானுக்கு தகவல் கசியவிட்ட இளம் தம்பதியை தூக்கிய டெல்லி போலீஸ்!

    இந்தியா
    பெண்கள் கவனத்திற்கு! இலவச பஸ் பயண திட்டத்தில் வரப்போகும் முக்கிய மாற்றம்! அரசின் அடுத்த அதிரடி திட்டம்!

    பெண்கள் கவனத்திற்கு! இலவச பஸ் பயண திட்டத்தில் வரப்போகும் முக்கிய மாற்றம்! அரசின் அடுத்த அதிரடி திட்டம்!

    தமிழ்நாடு
    சீட் வாங்கி தருவதாக ரூ. 4 கோடி மோசடி..! சி. விஜயபாஸ்கர் மீது பகிரங்க குற்றச்சாட்டு.!

    சீட் வாங்கி தருவதாக ரூ. 4 கோடி மோசடி..! சி. விஜயபாஸ்கர் மீது பகிரங்க குற்றச்சாட்டு.!

    தமிழ்நாடு
    தோட்டத்தில் நடந்த ‘மது பார்ட்டி!’.. திடீரென வெடித்த பணத் தகராறு! ரவுடி கொலையில் பகீர் திருப்பம்!

    தோட்டத்தில் நடந்த ‘மது பார்ட்டி!’.. திடீரென வெடித்த பணத் தகராறு! ரவுடி கொலையில் பகீர் திருப்பம்!

    குற்றம்
    இறங்கி வந்த கர்நாடகா.. தமிழகத்தை நோக்கி மீண்டும் பாய்கிறது காவிரி! நீர்திறப்பு அதிகரிப்பு!!

    இறங்கி வந்த கர்நாடகா.. தமிழகத்தை நோக்கி மீண்டும் பாய்கிறது காவிரி! நீர்திறப்பு அதிகரிப்பு!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share